உன் பாட்டை வெளியே வராம தமிழ்நாடு மக்களை காப்பாத்திட்டேன்- விவேக்கின் நினைவுகளை பகிர்ந்த செல்முருகன்

0
852
cellmurugan
- Advertisement -

தமிழ் சினிமாவின் சின்ன கலைவாணர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நடிகர் செல் முருகன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். இவர் 1990களின் தொடக்கத்தில் காமெடி நடிகராக தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார். பின் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மேலும், இவர் நடிகராகவும் சில படங்களில் நடித்திருந்தார். இவர் சினிமாவை தாண்டி பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருக்கிறார்.

-விளம்பரம்-
Vivek Shares His Coolers Secret In Recent Interview

அதிலும் இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் லட்ச கணக்கான மரங்களை நட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியது. இவரின் மறைவுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து இருந்தார்கள். மேலும், விவேக்கின் இறப்பு பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தினாலும் நடிகர் செல் முருகனுக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு தான்.

- Advertisement -

செல்முருகன்-விவேக் நட்பு:

செல் முருகன் 26 ஆண்டுகளாக விவேக்குடன் பணிபுரிந்து இருக்கிறார். விவேக் படங்களில் நிச்சயம் செல் முருகன் இடம்பெற்று விடுவார். சினிமாவை தாண்டி இவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். விவேக்கின் இறுதி சடங்கில் செல் முருகன் கண் கலங்கி அழுத வீடியோ சமூக வலைதளத்தில் பயங்கர வைரலானது. அதோடு விவேக்கின் இறப்பிற்கு பின்னரும் விவேக்கை மறக்காமல் தொடர்ந்து பல பதிவுகளை பதிவிட்டு வருகிறார் செல்முருகன். அந்த வகையில் சமீபத்தில் விவேக்கின் பிறந்தநாளை முன்னிட்டு விவேக்குடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார், மிஸ் யூ என்று பதிவிட்டு இருந்தார். அந்த அளவிற்கு விவேக் மீது அதிக அன்பும்,மரியாதையும் கொண்டவர் செல்முருகன்.

vivek

விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு:

இந்நிலையில் நேற்று மறைந்த நடிகர் விவேக் அவர்களின் முதலாம் நினைவு தினம். இதை ஒட்டி விவேக்கின் கனவான கிரீன் கலாம் ஒரு கோடி மரங்கள் நடும் திட்டத்தை தொடரும் வகையில் விவேக் கிரீன் கலாம் என்ற பெயரில் மரம் நடும் திட்டத்தை விவேக் அவர்களின் நண்பரும் நடிகருமான செல் முருகன் நேற்று காலை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நண்பர்கள் துணையுடன் தொடங்கி இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்வில் செல் முருகன் விவேக் குறித்து பல நெகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் இளையராஜா சாரோட பயங்கரமான ரசிகன். அவரது இசையில் ஒரு பாடல் பாடியிருக்கேன்.

-விளம்பரம்-

விவேக் குறித்து செல்முருகன் அளித்த பேட்டி:

ஒருநாள் விவேக் சார் இளையராஜா சாரை பார்க்க போகிறேன், வருகிறாயா? என்று கேட்டார். நான் உடனே வருகிறேன் என்று சொன்னேன். அப்போது பாலுமகேந்திரா சார் தனுஷ் நடித்துக் கொண்டிருக்கும் ‘அது ஒரு கனாக்காலம்’ என்ற படத்தை எடுத்து கொண்டு இருக்கிறார். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் நடித்துக் கொண்டிருந்தார். அந்த படத்திற்கு ராஜா சார்தான் இசை. அந்த படத்திற்கான பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது தான் நானும் விவேக் சாரும் ராஜா சாரை சந்திக்கப்போனோம். பின் விவேக் சார் என்னை ராஜா சாரிடம் அறிமுகம் செய்து வைத்தார். பின் கோரஸ் டீமில் ஆள் இல்லை என்று சொன்னவுடன் நீ பாடுகிறாயா? என்று ராஜா சார் கேட்டார். நானும் உடனே ஓகே சொல்லிவிட்டேன். அப்புறம் கோரஸ் பாட நானும் ரெடியாகி விட்டேன். என் கூட நல்லா தெரிஞ்ச ரெண்டு பேரும் ரெடியாகிவிட்டார்கள்.

செல்முருகனுக்கு கிடைத்த பாடல் வாய்ப்பு:

பின் பாடலை பாட ஆரம்பித்தோம். உடனே இளையராஜா சார் நிறுத்துங்கள் என்று சொல்லிவிட்டு முருகா உங்களுக்கு ஸ்ருதி தப்புதே என்றார். நானும் சாரி சார் இப்போ ஒழுங்கா பாடுகிறேன் என்று பாடினேன். அப்படியே மூன்று முறைக்கு மேல் ராஜா சார் ஸ்ருதி தப்புதே என்று சொல்லி கொண்டே இருந்தார். அதற்குப் பிறகு நான் விவேக் சார் பக்கத்தில் போய் ஸ்ருதி தப்புதே என்று சொல்கிறார்களே? அப்படி என்றால் என்ன என்று கேட்டேன்? யோவ் என்னய்யா இப்படி பண்ற, தூரப் போய் நில்லு என்றார் விவேக் சார். அதன் பிறகு அந்த கோரஸ் டீம் உடன் எப்படியே பாடி முடித்து விட்டோம். ஆனால், அடுத்தநாள் சாரி விவேக் உங்களுக்கு காட்சிகள் கம்மியா இருக்கு. அடுத்த படம் சேர்ந்து பண்ணுவோம் என்று பாலுமகேந்திரா சார் கிட்ட இருந்து போன் வந்தது. ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்று விவேக் சார் சொன்னார்.

செல்முருகனை விவேக் கலாய்த்த நிகழ்வு:

பின் நான், என்ன சார் படம் போயிருச்சு சந்தோஷம் என்று சொல்றீங்களே? என்று கேட்டேன். இல்லை அப்பா படம் பண்ணி இருந்தால் நீ பாடுனது வெளியே வந்திருக்கும். இதன் மூலமாக என் தமிழ்நாட்டு மக்களை காப்பாற்றி இருக்கிறேன். இந்த படத்துக்காக பணம் போனாலும் பரவாயில்லை, உன் குரல் வெளியே வராமல் போனது அது போதும் என்று சிரித்தார். அவர் எப்போதும் கூடவே இருக்கிற மாதிரிதான் இருக்கு. பூச்சி முருகன் சார் சொன்னாரு, இன்னைக்கு ஈஸ்டர் தினம் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினம். இதேபோன்று விவேக் திரும்பி வருவார் என்று சொன்னார். அவர் நட்ட 33 லட்சம் மரங்களின் ஆக்சிஜன் மூலமாக “ஹீ ஈஸ் தேர்” அவர் இன்னமும் இங்கே தான் இருக்கிறார் என்று சொன்னதாக தான் தோன்றுகிறது என்று கூறியிருந்தார்

Advertisement