சீனாவை பற்றி அன்றே கூறியுள்ள சோ. தற்போது வைரலாகும் வீடியோ.

0
115350
cho
- Advertisement -

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வுஹான் நகரில் தான் இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது. சீனாவை தொடர்ந்து அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் போன்ற பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால் உலக நாடுகள் முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்துகின்றனர். இந்த கொரோனா வைரஸினால் ஆயிரக்கணக்கான பேர் உயிரிழந்து உள்ளார்கள். இந்த வைரஸ் தாக்கிய நபரை குணப்படுத்த இன்னும் மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள்.

-விளம்பரம்-
Image result for china

- Advertisement -

இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்த கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் அதன் பரவல் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் இந்த பாதிப்பை தடுக்க ஏப்ரல் 15 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அரசாங்கம். தமிழகத்தில் இதுவரை 26 பேர் இந்த கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆகவே ஒட்டுமொத்த உலகையும் இந்த சீனா கதி கலங்க வைத்து உள்ளது.

இந்நிலையில் நடிகர் சோ அவர்கள் சீனாவை பற்றி அன்றே சொல்லியிருந்தார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் அவர் கூறியிருப்பது, சீனா அடிக்கடி இந்தியாவின் மீது படையெடுத்து கொண்டே இருக்கும். அருணாச்சலப் பிரதேசம் எங்களது என்று சொல்லி பெரிய ஆர்ப்பாட்டமே செய்திருந்தது சீனா.

-விளம்பரம்-

பார்டர் விஷயத்தில் சீனாவை விட மோசமாக நடந்து கொள்பவர்கள் வேறு யாருமே இருக்க மாட்டார்கள். ஆனால், இன்றும் இந்தியா–சீனா நல்லுறவில் இருக்க வேண்டும் என்று இங்கு பலர் தயாராக இருக்கிறார்கள். என்னை பொறுத்தவரை அமெரிக்காவை உயர்த்தி, சீனாவை அமுக்க வேண்டும். இந்தியாவிற்கு தேவையில்லாத அண்டை நாடு சீனா. சீனாவினால் எப்போதும் இந்தியாவிற்கு பல இடைஞ்சல்கள் தான் வருமே தவிர எந்த ஒரு நன்மையும் கிடையாது.

சீனா போன்ற நாடுகளுடன் நாம் எப்போதும் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். மேலும்,சீனா போன்ற நாடுகளுடன் தேவைப்படும்போது நட்புறவு வைத்தும், தேவை இல்லை என்றால் ஒதுங்கி இருத்தல் வேண்டும் என்பது குறித்து நடிகர் சோ அவர்கள் ஒரு கதையும் கூறியிருந்தார். அதை நீங்களே கேளுங்கள்..

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் சோ ராமசாமி. இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் பத்திரிக்கை ஆசிரியர், நாடக ஆசிரியர், வக்கீல் என பல்வேறு பொறுப்புகளை மேற்கொண்டவர். துக்ளக் என்னும் அரசியல் வார பத்திரிக்கையின் நிறுவுநர் மற்றும் ஆசிரியர் ஆவார். இவர் 14 திரைப்படங்களுக்கு கதை எழுதியுள்ளார். 200 திரைப்படங்களில் நடித்துள்ளார்.

Advertisement