தற்போது சோசியல் மீடியா முழுவதும் நடிகர் தாமு சொற்பொழிவால் மாணவர்கள் அழுந்திருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக தாமுவும் விளக்கமும் கொடுத்திருந்த தாமு இதுவரை 28 லட்சம் பள்ளி மாணவர்களை அழ வைத்திருக்கிறேன். இருந்தாலும் நெட்டிசன்கள் பலரும் தாமுவை கடுமையாக கண்டித்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து உளவியல் நிபுணர்கள் பேட்டியில் கூறியிருப்பது, அழவைப்பது மாணவர்களுடைய மனதில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மாணவர்களிடம் அவர்கள் தன்னுடைய அம்மா அப்பா பேச்சைக் கேட்கவில்லை. அதனால் அவர்கள் தவறானவர்கள் என்று உணர்ச்சிப் பொங்க பேசும்போது அவர்கள் குற்ற உணர்ச்சிக்கு ஆளாகிறார்கள்.

இதனால் அவர்களே அவர்களை வெறுக்க ஆரம்பிப்பார்கள். இது அவர்களின் மன அழுத்தத்திற்குள் தள்ளிவிடும். தடுப்பூசி போட்டால் குழந்தைகள் அழுவது போல தான் என்னுடைய பேச்சை கேட்டு குழந்தைகள் அழுகிறார்கள் என்று தாமு சொன்னார். ஆனால், தடுப்பூசி போட்டால் நோய் தாக்காது என்பதற்கான அறிவியல் ஆதாரம் இருக்கிறது. மாணவர்களிடம் அப்படி பேசி அழவிட்டால் அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை சரியாகிவிடும் என்பதற்கு என்ன அறிவியல் ஆதாரம் இருக்கிறது. மேலும், மாணவர்கள் வளரிளம் பருவத்தில் இருக்கின்றார்கள்.

Advertisement

அந்த குறிப்பிட்ட வயசில் மாணவர்கள் படிப்பு, குடும்பம், சமூக எதிர்ப்புகள் என நிறைய மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். மயிலிறகால் வருடப்பட வேண்டிய அந்த மாணவர்களுடைய மனதை நடிகர் தாமு கடப்பாரையை வைத்து தோன்றுகிறார்.மைக் இருந்தால் யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசலாமா? தாமு செய்வது எப்படி இருக்கு என்றால்? பிறந்த குழந்தைக்கு பால் கொடுப்பதற்கு பதில் கொதிக்கும் ரசத்தை ரசம் உடலுக்கு நல்லது என்று ஊற்றுவது போல இருக்கிறது.

மோட்டிவேஷன் என்ற பெயரில் அறிவியல் ஆதாரம் இல்லாமல் இவர் இப்படி பேசுகிறார். மாணவர்கள் மத்தியில் காதல் போன்ற விஷயங்களை ரொம்ப கவனத்தோடு தான் பேச வேண்டும். காதல் தவறு கிடையாது. ஆனால், வளரிளம் பருவத்தில் வரக்கூடிய காதல் அவசியமற்றது. இதை பக்குவமாக அவர்களுக்கு எடுத்து புரிய வைக்க வேண்டும். மாறாக காதலிக்காதே என்று சொல்லும்போது காதலித்துப் பார்த்தால் என்ன என்ற எண்ணம் அவர்களுக்குள் வந்து விடும்.

Advertisement

பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை கொடுப்பதற்கு படித்த உளவியல் நிபுணர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை பள்ளிக்கல்வித்துறை பயன்படுத்த வேண்டும். பள்ளி உளவியல் என்ற பாடமே உளவியலில் உள்ளது. அதைப் படித்து அதில் நிபுணத்துவம் பெற்றவர்கள் தான் பள்ளி மாணவர்களிடம் பேசுவதற்கு சிறந்த தேர்வு என்று கூறியிருக்கிறார். இதனை அடுத்து பள்ளி கல்வித்துறை கூறியிருப்பது, நடிகர் தாமு அரசு பள்ளிகளுக்குள் வந்து மாணவர்களிடம் பேசுவதற்கு பள்ளிக்கல்வித்துறையிடம் முறையாக அனுமதி வாங்கவில்லை.

Advertisement
மனநல மருத்துவர் சேரன்

அவரை அழைத்து நிகழ்ச்சிகள் நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியரிடம் விளக்கம் கேட்டிருக்கிறோம். அதன் பிறகு நடிகர் தாமுவை அழைத்து அரசு பள்ளியில் நிகழ்ச்சி நடத்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். பள்ளி ஆசிரியர்களும் காவல்துறையும் தான் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தன்னை அழைத்ததாக தாமு சொல்லி இருக்கிறார். ஆனால், தாமு தான் ஆசிரியர்களிடமும் பள்ளி மாணவர்களிடமும் ஊக்கப்படுத்தும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தருகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

பள்ளி மாணவர்களிடம் யாரை அழைத்துப் பேச வைக்க போகிறோம் என்பதை முடிவு செய்வதற்கு தெளிவான விதிகள் இருக்கின்றது. அந்த விதிகளை ஆசிரியர்கள் பின்பற்றவில்லை. நிறைய ஆசிரியர்களுக்கு அந்த விதிகள் இருப்பதே தெரியவில்லை. பள்ளி மாணவர்களிடம் பேசுவர்கள் தேர்வு எழுத்தாளர்களும், சாதனையாளர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை நாப்பது வருடங்களுக்கு முன்பே விதிகள் வரையறுக்கப்பட்டு இருக்கிறது. காவல்துறை அதிகாரிகள் பள்ளி மாணவர்களிடம் பேசி அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். ஆனால், காவல்துறை பள்ளி மாணவர்களிடம் யார் பேச வேண்டும் என்பதை முடிவு செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்கள்

Advertisement