தனுஷுடன் நடித்த விளம்பரத்தின் வீடியோவை பகிர்ந்த பிரபல பாலிவுட் நடிகை. (இவரு சிம்பு படத்துல நடிச்சவர் ஆச்சே)

0
1108
dhanush
- Advertisement -

தமிழ் சினிமாவின் ஸ்லிம் சிவாஜி, தென்னெக ப்ருஸ்லீ, நடிப்பு அசுரன் என்று பல்வேறு பட்டப் பெயர்களால் அழைக்கப்படுவர் தனுஷ். தமிழில் பல படங்களில் தனது அசுரத்தனமான நடிப்பை நிரூபித்த தனுஷ் ராஞ்சனா என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமான தனுஷ், அதை தொடர்ந்து சமிதாப் படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுடன் நடித்து இருந்தார்.இப்படி ஒரு நிலையில் தனுசுடன் நடித்த விளம்பரத்தின் வீடியோ ஒன்றை பிரபல பாலிவுட் நடிகை அதா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-

பாலிவுட் சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகைகள் தமிழிலும் தலை காண்பித்து உள்ளனர். அந்த வகையில் நடிகை அதா ஷர்மாவும் ஒருவர். அம்மா கிரியேஷன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்த படம் ‘சார்லி சாப்ளின் 2’. இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட இந்திய மொழிகள் பலவற்றில் ரீமேக் செய்யப்பட்டு வசூல் சாதனை புரிந்தது அனைவரும் அறிந்ததே.  முதல் பாகத்தின் ஹீரோவான பிரபுதேவாவே இதன் இரண்டாம் பாகத்தில் நாயகனாக நடித்திருந்தார்.

- Advertisement -

கதாநாயகிகளாக நிக்கி கல்ராணி, அதா சர்மாநடித்திருந்தனர். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபு, சந்தனா, விவேக் பிரசன்னா, ரவிமரியா, டி.சிவா ஆகியோருடன் வில்லன்களாக தேவ்கில், சமீர் கோச்சார்நடித்திருந்தனர்.இந்த படத்தில் நடித்த அதா ஷர்மா ஏற்கனவே சிம்பு நடிப்பில் வெளியான ‘இது நம்ம ஆளு ‘ படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒரு நிலையில் இவர் பல ஆண்டுகளுக்கு முன்னர் தனுஷுடன் நடித்துள்ள விளம்பரத்தின் வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. தனுஷ் இந்த விளம்பரத்தில் மட்டுமல்லாமல் பாராசூட், OLX, 7Up போன்ற பல்வேறு விளம்பரங்களில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement