விஜய் டிவி சீரியல் பிரபலத்துக்கு அடித்த ஜாக்பாட், தெலுங்கு சின்னத்திரையிலும் இனி ஹீரோ – யாருன்னு நீங்களே பாருங்க

0
454
Diraviyam
- Advertisement -

விஜய் டிவி சீரியல் பிரபலம் தெலுங்கு சீரியலில் நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியால் மீடியாவில் வைரலாகி வருகிறது. பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்குகிறது. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனலின் டிஆர்பி ரேடிங்காக புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறார்கள். இதனால் சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அதிலும் சீரியல் நடிக்கும் நடிகர்களும் மக்கள் மத்தியில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து விடுகிறார்கள்.

-விளம்பரம்-

மேலும், வெள்ளித்திரை நடிகர்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகர்களுக்கும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சின்னத்திரையில் பல நடிகர்கள் பிரபலமாக இருந்தாலும் ஒரு சிலர் மட்டும் தான் இந்தத் துறையில் சிறப்பான வளர்ச்சி பெறுவார்கள். அந்த வகையில் தமிழ் சின்னத்திரை தொடர்களில் நடித்த பலரும் தெலுங்கு, மலையாளம், கன்னடம்,ஹிந்தி என பிறமொழி தொடர்களிலும் அசத்தி கொண்டு வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பல பேர் படங்களிலும் மாஸ் காட்டி வருகிறார்கள். இந்த நிலையில் இப்படி ஒரு சிறப்பான வாய்ப்பை விஜய் டிவி நடிகர் திரவியத்திற்கு கிடைத்துள்ளது.

- Advertisement -

ஈரமான ரோஜாவே சீரியல்:

இவர் 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட்டான ஈரமான ரோஜாவே என்ற தொடரின் மூலம் தான் மக்கள் மத்தியில் பிரபலமானார். இந்த தொடரில் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் கதாநாயகனாக புதுமுக நடிகர் திரவியம் நடித்தார். இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக பவித்ரா நடித்திருந்தா. மலரின் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளையும் அதை சமாளித்து மலருக்கு உறுதுணையாக இருக்கும் வெற்றியின் கதை தான் ஈரமான ரோஜாவே. இந்த தொடர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த சீரியலுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமும் சேர்ந்தது .

This image has an empty alt attribute; its file name is 1-45.jpg

திரவியம் சின்னத்திரை பயணம்:

பின் அடுத்தடுத்து பல வாய்ப்புகள் திரவியத்திற்கு கிடைத்தது. கடந்த ஆண்டுதான் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து எவர் சில குறும் படங்களிலும் நடித்தார். தற்போது திரவியம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே 2வில் ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இந்த சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கின்றது. ஜீவா நேசித்த பெண்ணை இவருடைய அண்ணா திருமணம் செய்து கொள்கிறார். அண்ணாவிற்கு பார்க்கும் பெண்ணை இக்கட்டான சூழலில் ஜீவா திருமணம் செய்கிறார்.

-விளம்பரம்-

ஈரமான ரோஜாவே 2 சீரியல்:

பின் இவர்களுடைய வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கப்போகிறது? என்று பல அதிர்ச்சியான திருப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றது. மேலும், இந்த இரண்டு ஜோடிகளும் தங்களுடைய வாழ்க்கை எப்படி தேர்வு செய்து போகிறார்கள்? இவர்களின் இந்த விருப்பம் இல்லாத வாழ்க்கை தொடருமா? உண்மை நான்கு பேருக்கும் தெரிய வருமா? என்று பல எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல் ஒளிபரப்பாகி கொஞ்ச நாட்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

திரவியம் நடிக்கும் தெலுங்கு சீரியல்:

இந்த நிலையில் நடிகர் திரவியம் வேறு மொழி சீரியல் சீரியலில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், திரவியம் அவர்கள் தெலுங்கிலும் தற்போது நியூ என்ட்ரி கொடுக்க இருக்கிறார். இவர் தெலுங்கில் ‘வண்டலக்கா’ என்ற சீரியலில் நடிக்க உள்ளார். இது தான் இவர் முதல் முறையாக நடிக்கும் தெலுங்கு சீரியல். இந்த தொடர் ஸ்டார் மா என்ற சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. இந்தத் தொடர் குறித்த போஸ்டர் எல்லாம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. இதை பார்த்து தமிழ் ரசிகர்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement