நகைச்சுவை ஜாம்பவான் கவுண்டமனியின் மகளை பார்த்துள்ளீர்களா.

0
70626
- Advertisement -

பொதுவாகவே இந்த உலகில் பலர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல உதவிகளைச் செய்து வருகின்றனர். சினிமா உலகில் பார்த்தால் நடிகர் சூர்யா அவர்கள் அகரம் என்ற அறக்கட்டளையின் மூலம் டிரஸ்ட் ஒன்றை நடத்தி வருகிறார். இது அனைவருக்கும் தெரிந்ததே. சினிமா உலகில் மட்டும் இல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் பல பேர் யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்து வருகின்றன. பிறருக்கு சேவை செய்வது தெய்வத்தின் தரிசனத்திற்கு சமம் என்று கூறுவார்கள். அந்த வகையில் பல பேர் வெளியே சொல்லாமல் சத்தமில்லாமல் உதவிகளை செய்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் கவுண்டமணியின் மகள் யாருக்கும் தெரியாமல் பல உதவிகளை செய்து வந்து உள்ளார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தது.

-விளம்பரம்-

சினிமா உலகில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்து விளங்கியவர் நடிகர் கவுண்டமணி. ஒரு காலத்தில் தமிழ் சினிமா உலகில் கொடி கட்டி பறந்தவர் நடிகர் கவுண்டமணி. இவருடைய கால்ஷீட் இருந்தால் தான் அந்த படம் ஹிட்டாகும் என்ற நிலை இருந்தது.
இவர் 1964 ஆம் ஆண்டு தான் திரை உலகில் அறிமுகம் ஆனார். இவர் சினிமா உலகில் துவக்க காலங்களில் தனியாகத் தான் நகைச்சுவை நடிகராக நடித்தார். பின் செந்திலுடன் இணைந்து பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தையும் பிடித்தார். இவர் இதுவரை 450 படங்களுக்கு மேல் நடித்து இருந்தார். இவர் படங்களில் வில்லன், குணச்சித்திர நடிகர், நகைச்சுவை நடிகர் என பல வேடங்களில் நடித்து இருந்தார்.

- Advertisement -

நடிகர் கவுண்டமணி அவர்கள் சாந்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு சுமித்ரா, செல்வி என்ற இரு மகள்கள் உள்ளார்கள். பெரும்பாலும் நடிகர் கவுண்டமணி அவர்கள் தன்னுடைய குடும்பத்தை வெளி உலகிற்கு காட்டியதே இல்லை. அப்படி இருக்கும் போது தன் மகள் செய்யும் சேவையை மட்டும் வெளியிடுவாரா? இப்படி இருக்கும் நிலையிலும் இவரின் மகள் சேவை எப்படி வெளியே வந்தது. நடிகர் கவுண்டமணி மக்கள் சுமித்ரா அவர்கள் இந்த சமூக சேவையை சில வருடங்களாக செய்து வருகிறார் என்றும் சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு மாதம் தவறாமல் ஒரு தம்பதிகள் உதவி செய்துவந்தார் என்றும் கூறப்பட்டது.

நீண்ட காலமாகவே தாங்கள் யார் என்று எதையுமே வெளிக்காட்டிக் கொள்ளாமல் இவர்கள் உதவி செய்தார்களாம். அதன் பின்னர் அங்கிருந்தவர்கள் கேட்டுக் கொண்ட காரணத்தினால் தான் இவர்கள் இவர்களுக்கு உதவி செய்ய வந்த போது அந்தப் பெண்ணின் பெயர் சுமித்ரா என்று தெரியவந்ததாம். மேலும் , இவர் பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மகள் என்று தெரியவந்ததாம். அந்த பெண்ணின் கணவர் வெங்கடாசலம். கவுண்டமணியின் மகள் சுமித்ரா இப்படி வருடங்களாக சத்தமில்லாமல் செய்து வந்த உதவி தற்போது சமூக வலைத்தளங்களில் மீண்டும் வைரலாக பேசப்பட்டு வருகிறது. ஆனால், இது எந்த அளவு உண்மை என்று தான் தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement