தமிழ் சினிமாவில் காமெடி சக்கரவர்த்தியாக திகழ்ந்து வந்தவர் நடிகர் கௌண்டமணி. தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி நடிகர்கள் வந்தாலும் கவுண்டமணி காமெடிகள் தற்போதும் ரசிகர்களால் விரும்பப்படும் வருகிறது. எப்போதும் இவரது காமெடிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக இருந்து கொண்டு தான் வருகிறது.ரஜினி கமல் காலம் தொடங்கி தற்போது நிறைய நடிகர்கள் வரை கவுண்டமணி பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் செய்த காமெடிகள் தான் தற்போதுள்ள பல்வேறு காமெடி நடிகர்களின் ரோல் மாடலாக இருந்து வருகிறது.
சமீப காலமாக கௌண்டமணி எந்த படத்திலும் நடிப்பது இல்லை. இருப்பினும் இவரது காமெடி இன்னமும் சமூக வலைதளத்தில் வளம் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதே போல கௌண்டமணியின் இந்த புகைப்படம் சமீபத்தில் வைரலாக பரவி வருகிறது. இதில் கௌதமணியுடன் இருப்பது வேறு யாரும் இல்லை பிரபல நடிகர் சத்யராஜ் மனைவி, மகன் மற்றும் மகள் தான்.
தமிழ் சினிமாவில் பெரும்பாலும் ஒரு சில காமெடி நடிகர்கள் மட்டும்தான் ஹீரோவுடன் சேர்ந்து செய்யும் காமெடிகளில் வெற்றி அடைவார்கள். அந்த வகையில் சத்யராஜ் – கவுண்டமணி ஜோடியின் காமெடி இன்றளவும் மறக்க முடியாது. இவர்கள் இருவருமே இணைந்து நடித்த பல்வேறு படங்களின் காமெடிகள் மாபெரும் வெற்றியடைந்தது. இதனாலேயே சத்யராஜ் தன்னுடைய பெரும்பாலான படங்களில் கவுண்டமணியை தனது காமெடி ஜோடியாக கமிட் செய்து விடுவார். சினிமாவையும் தாண்டி இவர்கள் இருவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் தான்.
கவுண்டமணி பற்றி அறியாத பல விஷயங்கள் சத்யராஜுக்கு தெரியும் கவுண்டமணி இறுதியாக சத்யராஜுடன் இணைந்து கடந்த 2010ஆம் ஆண்டு வெளியான பொள்ளாச்சி மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்திருந்தார் அதன்பின்னர் கவுண்டமணி தமிழில் மூன்று படங்களில் மட்டுமே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது இடையில் கவுண்டமணிக்கு ஏற்பட்ட உடல் பிரச்சினை காரணமாகத்தான் அவர் சினிமாவில் இருந்து ஒதுங்கி விட்டதாக கூறப்படுகிறது அதே போல பெரிதாக விழாக்களில் கூட கவுண்டமணி பங்கு பெறுவதும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது