பகவதி படத்துல அப்படி பண்ணதுக்காக விஜய் அண்ணா கிட்ட மன்னிப்பு கேட்கணும் – ஜெய் பேட்டி.

0
4787
jai
- Advertisement -

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ஜெய். 2002-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த திரைப்படம் ‘பகவதி’. இது தான் ஜெய் அறிமுகமான முதல் திரைப்படமாம். இந்த படத்தினை பிரபல இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் நடித்திருந்தார். இப்படத்தில் நடிகர் விஜய்யின் தம்பியாக வலம் வந்திருந்தார் நடிகர் ஜெய். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது.

-விளம்பரம்-
jai vijay

இதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை 28’ படத்தில் முக்கிய ரோலில் நடித்த ஜெய், சசிக்குமார் இயக்கிய ‘சுப்ரமணியபுரம்’ படத்தில் ஹீரோவாக நடித்தார். ‘சுப்ரமணியபுரம்’ படத்தின் ஹிட்டிற்கு பிறகு ‘வாமனன், அதே நேரம் அதே இடம், கோவா, அவள் பெயர் தமிழரசி, கனிமொழி, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, நவீன சரஸ்வதி சபதம், வடகறி, திருமணம் எனும் நிக்காஹ், வலியவன், புகழ், தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும், எனக்கு வாய்த்த அடிமைகள், பலூன், கலகலப்பு 2, ஜருகண்டி’ போன்ற பல படங்களில் ஹீரோவாக நடித்தார் ஜெய்.

- Advertisement -

தற்போது, ஜெய் தனது முதல் படமான ‘பகவதி’ பற்றி சில சுவாரஸ்யமான தகவல்களை கூறியிருக்கிறார். குறிப்பாக ‘தளபதி’ விஜய்யுடன் நடித்த அனுபவம் பற்றியும் பேசியிருக்கிறார் ஜெய். அவர் பேசுகையில் “எனக்கு முதல் பட வாய்ப்பை கொடுத்த இயக்குநர் வெங்கடேஷ் சாருக்கு நன்றி. தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இருப்பினும், என்னை இந்த படத்தில் தம்பியாக அறிமுகப்படுத்த கிரீன் சிக்னல் கொடுத்த ‘தளபதி’ விஜய் சாருக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ்.

jai

‘பகவதி’ படத்தை இப்போலாம் டிவி-யில் பார்க்கும் போது, ஒரு குற்ற உணர்ச்சி வந்திடுது. ஏன் தெரியுமா, அந்த படத்தின் படப்பிடிப்பின் போது நான் விஜய் சாரை அதிகமாக கஷ்டப்படுத்தியிருக்கேன். விஜய் சார் கூட சேர்ந்து நடிக்கும் போது, அவர் பக்காவா நடிச்சிருவார். ஆனா, எனக்கு அதுதான் முதல் படம்ங்கிறதால சொதப்பிடுவேன்.

-விளம்பரம்-

அதுனால, நான் சரியாக நடிக்குற வரைக்கும் விஜய் சாரும் திரும்ப திரும்ப அந்த காட்சியை நடிக்க வேண்டியது இருக்கும். கூடிய விரைவில் விஜய் சார் படத்தில் அவருக்கு எதிராக ஒரு பவர்ஃபுல்லான வில்லன் ரோல்ல நடிச்சு, அவர்கிட்ட இருந்து பாராட்டு வாங்கணும்னு எனக்கொரு ஆசை இருக்கு” என்று ஜெய் தெரிவித்திருக்கிறார்.

Advertisement