தமிழ் சினிமாவின் கமர்ஷியல் படங்களின் கிங்காக இருந்த கே எஸ் ரவி குமார், நாட்டாமை, நட்புக்காக, அவ்வை சண்முகி, தெனாலி, படையப்பா, முத்து, வில்லன், வரலாறு, தசாவதாரம் உள்ளிட்ட பல ஹிட் படங்களை கொடுத்து உள்ளார். மேலும், இவர் இயக்கிய பல படங்கள் பிளாக் பஸ்டர் தான். அதே போல ரஜினியை வைத்து இவர் இயக்கிய முத்து, படையப்பா போன்ற படங்களும் சூப்பர் ஹிட் அடித்தது. கே எஸ் ரவிக்குமார் முதன் முறையாக ரஜினியுடன் கைகோர்த்து 1995 ஆம் ஆண்டு வெளியான முத்து படம் மூலம் தான். இந்த படத்தில் ரஜினியுடன் சரத்பாபு நடித்திருப்பார். ஆனால், சரத் பாபு கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது பிரபல நடிகரான ஜெயராம் தானாம்.
தமிழ் மொழியில் சில படங்களில் மட்டும் நடித்து இருந்தாலும் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் நடிகர் ஜெயராம். 90 கால கட்டங்களில் இவருடைய பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. இவர் திரைப்பட நடிகர் மட்டும் இல்லாமல் பல குரல் பேசும் கலைஞரும் ஆவார். நடிகர் ஜெயராம் அவர்கள் மலையாளத்தில் மிகப் பிரபலமான நடிகர் ஆவார். இவர் தமிழில் முறைமாமன், கோகுலம், பஞ்சதந்திரம், ஏகன், துப்பாக்கி உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இவருடைய காமெடி கலந்த நடிப்பு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் கவர்ந்தது.
தற்போது நடிகர் ஜெயராம் அவர்கள் மணிரத்னம் இயக்கும் “பொன்னியின் செல்வன்” என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சமஸ்கிருத மொழியில் உருவாகும் படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் ஜெயராம் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் ரஜினி நடித்த முத்து படம் குறித்து சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் முத்து படத்தில் முதலில் சரத்பாபு நடித்த கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் நடிப்பதாக இருந்தது. இது குறித்து அவர் பேட்டியில் கூறியிருப்பது, முத்து படத்தில் சரத்பாபு கதாபாத்திரத்தில் நடிக்க என்னிடம் கேட்டார்கள்.
அந்த படத்தில் சரத் பாபு அவர்கள் ரஜினியை கன்னத்தில் அறைந்து இருப்பார். அந்த மாதிரி காட்சிகளில் நடிக்க எனக்கு உடன்பாடில்லை. அந்த மாதிரி நான் நடித்திருந்தால் ரஜினி ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதித்து இருப்பேன். ஆனால், நான் கமலுடன் தெனாலி படத்தில் நடித்திருந்தேன். அந்த படத்தில் கமலை அறைந்திருப்பேன். ஏன் அதில் மட்டும் பிரச்சனை இல்லையா? என்று கேட்டால் நான் கமலுடன் இதற்கு முன்பே ஒரு சில படங்களில் நடித்து இருந்தேன். அதனால் அவருடன் இணைந்து நடிப்பதில் எனக்கு ஒன்னும் அவ்வளவு கஷ்டமாக இல்லை என்று பகிர்ந்துகொண்டார். இப்படி இவர் கூறிய கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.