நடிகர் ஜெய்சங்கரின் நினைவு நாள் குறித்து சோசியல் மீடியாவில் ரசிகர்கள் பதிவிட்டு வரும் பதிவு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்று அழைக்கபட்டவர் பழம்பெரும் நடிகர் ஜெய்சங்கர். எம் ஜி ஆர், சிவாஜி இருந்த காலகட்டத்திலேயே தனக்கென்று ஒரு தனி பாதையை அமைத்துக் கொண்டு தனக்கென்ற பாதையில் சினிமாவில் வலம் வந்தவர் ஜெய்சங்கர். இவர் 1965- இல் தனது சினிமா பயணத்தை தொடங்கினார்.

மேலும், இவர் படங்களில் பல வேடங்களில் நடித்து இருக்கிறார். அதோடு அந்த காலத்திலேயே ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு நிகரான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் நடித்த நடிகரும் இவர் தான். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற நடிகருக்கு இணையாக மக்கள் மத்தியில் அதிகமாக கொண்டாடப்பட்ட நடிகர் ஜெய்சங்கர். இவரை மக்கள் கலைஞர் என்றுதான் அழைத்தார்கள். காரணம், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இவருடைய நடிப்பில் படங்கள் ரிலீஸ் ஆகிவிடும்.

Advertisement

ஜெய்சங்கர் திரைப்பயணம்:

அந்த அளவிற்கு பிஸியான நடிகராக வலம் வந்தார் ஜெய்சங்கர். மேலும், இவர் படங்களில் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லன், குணச்சித்திர வேடங்களிலும் மிரட்டி இருந்தார். தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா ஹீரோக்களில் ஜெய்சங்கர் தனித்துவமான திகழ்ந்தார். இவர் படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் மக்களை மகிழ்வித்தும் வந்தார். ஒரு படம் சரியாக அமைய கதை மட்டும் போதுமானதில்லை காதல், காமெடி, சண்டை காட்சிகள் என அனைத்தும் வேண்டும் என்ற விஷயங்களையும் சொன்னவர் ஜெய்சங்கர்.

ஜெய்சங்கர் சிறப்பான திறமை:

அதோடு தமிழ் சினிமாவில் ஆக்சன், திரில்லர் படங்கள் வெளிவதற்கு ஒரு ஆணி வேராக இருந்தது ஜெய் ஜெய்சங்கர் தான். இவருடைய சண்டைக் காட்சிகள் எல்லாம் பிரமாதமாக இருக்கிறோம். சஸ்பென்ஸ் திரில்லருடன் கூடிய வகையில் இவரின் சண்டைக்காட்சிகள் இருக்கும். அதோடு இவர் வழக்கறிஞர் குடும்பத்தை சேர்ந்தவர். இவர் பெரிய வழக்கறிஞர் ஆக வேண்டும் என்பதுதான் இவருடைய தந்தையின் ஆசை. ஆனால், கல்லூரி காலத்தில் தொடங்கிய போதே இவருக்கு நடிப்பின் மீது ஆர்வம் வந்ததால் இவர் மேடை நாடகங்களில் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டிருந்தார்.

Advertisement

சினிமா வாய்ப்பு:

பின் சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கி படத்தில் நடிக்க தொடங்கினார். மேலும், முதல் படத்திலேயே டபுள் ரோலில் நடித்த நடிகராக ஜெய்சங்கர் இருந்தார். ஆரம்பத்தில் இவர் சினிமா உலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள கடுமையாக போராடினார். பின் ஒரு பிரபலமான நடிகராக மட்டுமில்லாமல் திறமையான கலைஞராகவும் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார் ஜெய்சங்கர். இவர் படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தாலும் பெரிதாக சம்பளத்தை எல்லாம் உயர்த்தி கேட்க மாட்டாராம். சினிமாவில் மட்டும் இப்படி இல்லாமல் இவர் தன்னுடைய வாழ்க்கையிலும் தன்னால் முடிந்த உதவிகளை பிறருக்கு செய்து கொடுத்து இருக்கிறார்.

Advertisement

ஜெய்சங்கர் நினைவு நாள்:

இப்படி ஒரு உன்னதமான நடிகர் ஜெய்சங்கர் 2000 ஆம் ஆண்டு நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்துவிட்டார். அப்போது அவருக்கு 61 வயதுதான். இறக்கும் வரை இவர் தொடர்ந்து படங்களில் நடித்துக் கொண்டு வந்தது மட்டும் இல்லாமல் சமூக சேவைகளையும் செய்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தென்னகத்து ஜேம்ஸ் பாண்ட் என பெயர் எடுத்த மகா கலைஞன் ஜெய்சங்கரின் 23வது நினைவு நாள். இவருடைய மறைவிற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகிறார்கள்.

Advertisement