நான் அமெரிக்காலாம் போல – தனது உடல் நிலை குறித்து மனம் திறந்த ஜனகராஜ். எப்படி இருந்த மனுஷன்.

0
2456
- Advertisement -

என்னை பத்தி தப்பு தப்பாக சொல்வதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன் என்று வேதனையில் நடிகர் ஜனகராஜ் அளித்திருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவான்களாக திகழ்ந்து வந்த செந்தில்- கவுண்டமணி காம்போவாக கலக்கி கொண்டிருந்த காலகட்டத்தில் தனியாக காமெடியில் அசத்தியவர் ஜனகராஜ். இவர் காமெடி நடிகராக மட்டுமல்லாது சிறந்த குணச்சித்திர நடிகராகவும் திகழ்ந்து இருந்தார். மேலும், 80 மற்றும் 90களில் வந்த அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் முக்கிய காமெடியன் ஜனாகராஜ் தான். ச

-விளம்பரம்-

ஒரு பக்கம் கண்ணை மூடிக்கொண்டு மறு கண்ணை சிமிட்டிக்கொண்டு பேசியே அனைவரையும் மயக்கி விடுவார். நவரச நாயகன் கார்த்திக் நடித்து 1990ல் வெளிவந்த கிழக்கு வாசல் படத்தின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமாகி இருந்தார். அதன் பின் இவர் தமிழில் மட்டும் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பின் இவர் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளிலும் சில படங்கள் நடித்துள்ளார். பிறகு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் இவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், இவர் சென்னையில் தான் இருக்கிறார்

- Advertisement -

ஜனகராஜ் அளித்த பேட்டி:

இந்த நிலையில் சமீபத்தில் youtube சேனல் ஒன்றுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜனகராஜ் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டதாக பலரும் கூறியிருந்தார்கள். நான் இதுவரை அமெரிக்கா போனதே இல்லை. உண்மைய சொல்ல போனால் எனக்கு விசாவே கிடையாது. என் பாஸ்போர்ட்டை வேண்டுமென்றால் பாருங்கள். போகாத ஒரு நாட்டுக்கு நான் போனதாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். நான் எத்தனை பேருக்கு தான் பதில் சொல்ல முடியும்.

சோசியல் மீடியா குறித்து சொன்னது:

நான் சென்னையில் தான் இருக்கிறேன். ஆனால், இங்கு இல்லை என்று பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இதற்காக எனக்கான சினிமா வாய்ப்புகளும் வராமல் போகிறது. அதேபோல் நான் உடல்நிலை சரியில்லாமல் எல்லாம் இல்லை. இதனால் ரஜினி சார் என்னை வந்து பார்த்ததாக சொல்கிறார்கள். இதெல்லாம் எப்ப நடந்தது என்று தெரியவில்லை. எத்தனை பேர் எனக்கு போன் பண்ணி இதைப்பற்றி கேட்கிறார்கள் தெரியுமா? இதையெல்லாம் கேட்கும்போது கஷ்டமாக இருக்கிறது. எத்தனை பேரிடம் நான் என்னைப் பற்றி நிரூபிக்க முடியும்.

-விளம்பரம்-

மன அழுத்தம் குறித்து சொன்னது:

கொரோனா வந்ததிலிருந்து எனக்கு ஒரே அழுத்தம், அழுத்தம், மன உளைச்சலாகத்தான் இருந்தது. ஒரு வழியாக கோவிட் முடிந்தது. அதற்கு பிறகும் நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. சும்மா ஓப்புக்கு படத்தில் நடிக்க அழைத்தார்கள். ஆனால், எனக்கு அப்படி பண்ண விருப்பமில்லை. அதேபோல் என்னால் என்னுடைய சிரிப்பை சிரிக்க முடியாது. நடிக்கும் போது அது வந்துவிடும். இப்போது நான் ஒல்லியாக தான் இருக்கிறேன். ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்கிறேன்.

குடும்பம் குறித்து சொன்னது:

முதலில் 90 கிலோ இருந்தேன் இப்போது நான் 64 கிலோவாக குறைந்து இருக்கிறேன். என் மனைவி தான் என்னை ரொம்ப நல்லா பார்த்துக் கொள்கிறார். நான் எவ்வளவு டென்ஷனாக வந்தாலும் என்னை ரிலாக்ஸ் ஆக்கி விடுவார். இதுவரை என் மனைவியுடன் சண்டை வந்ததே கிடையாது. என் மகன் நல்லா பார்த்துக் கொள்வான். எனக்கு ஒரே ஒரு மகன். ஜோகோவில் அவன் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். நான் சந்தோசமாக தான் இருக்கிறேன். வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம் என்று கூறி இருந்தார்.

Advertisement