சமீபத்தில் தனக்கு நடந்த கார் விபத்து குறித்து பேட்டியில் நடிகர் ஜீவா பேசியிருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜீவா திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் சமீபத்தில் சேலத்தில் இருந்து சென்னைக்கு தன்னுடைய மனைவி மற்றும் குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூர் பேருந்து நிறுத்தம் அருகில் நடிகர் ஜீவாவின் கார் விபத்துக்குள்ளானது.
அதாவது ஜீவாவின் கார் வந்த திசையில் இருசக்கர வாகனம் சாலையை கடப்பதற்காக குறுக்கே வந்திருந்தது. இதனால் ஜீவா தன்னுடைய கார் அங்கு இரு சக்கர வாகனம் மீது மோதிவிடக் கூடாது என்பதற்காக காரை திருப்பி இருந்தார். அப்போது ஜீவா கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்பின் மீது பயங்கரமாக மோதி இருந்தது. இந்த விபத்தினால் காரின் முன் பகுதி முழுவதுமே சேதம் அடைந்து இருந்தது.
ஜீவா கார் விபத்து:
அதோடு இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக நடிகர் ஜீவா மற்றும் அவருடைய மனைவிக்கு லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டும் இல்லாமல் இந்த விபத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு இருந்தது. அப்போது ஜீவாவை சுற்றி இருந்த மக்கள் வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார்கள். இதனால் ஜீவா வீடியோ எடுத்தவர்களை, ‘ஆக்சிடென்ட் ஆயிருக்கு வீடியோ எடுக்கிற நேரமா இது? ‘என்று டென்ஷன் ஆகி திட்டி இருந்தார்.
டென்ஷன் ஆனா ஜீவா:
பின் வேறு ஒரு காரை வர வைத்து நடிகர் ஜீவா அவருடைய மனைவியுடன் அங்கிருந்து சென்றார். இந்த சம்பவம் தொடர்பாக சின்ன சேலம் போலீசார்விபத்தில் சிக்கிய காரை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு இருந்தார்கள். இந்த வீடியோக்கள் சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி இருந்தது. தற்போது நடந்த இந்த கார் விபத்து குறித்து நடிகர் ஜீவா ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அதில், சமீபத்தில் எனக்கு ஒரு விபத்து நடந்தது.
கார் விபத்து குறித்து ஜீவா:
திடீரென்று ஒருத்தர் குறுக்கே வந்துட்டாரு அவரை காப்பாற்றுவதற்காக நான் காரைத் திருப்பி அந்த விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வண்டியே கவிழ்ந்து விட்டது. அப்ப எல்லாம் வண்டியை கவுத்து போட கஷ்டப்பட்டு இருக்கும்போது ஒருத்தன் வீடியோ எடுத்தான். அந்த வீடியோவை நான் அவன்கிட்ட இருந்து வாங்கிட்டேன். ஆனால், அவன் அண்ணா அண்ணா போனை திரும்ப குடுங்க அண்ணா என்று கேட்டதால் திருப்பி கொடுத்து விட்டேன். அப்புறம் பார்த்தா அந்த வீடியோ தான் வெளியே வந்தது.
காசு தான் எல்லாமே:
விபத்து நடந்து பத்தாவது நிமிஷத்துல எங்க அம்மா நியூசை பார்த்துவிட்டு கால் பண்ணி, என்ன ஆச்சுன்னு கேக்குறாங்க. நான் எங்க அம்மாவுக்கு போன் பண்ணும் போது கூட அவங்க எடுக்கல. இதுதான் மீடியாவின் பவர் என்று நான் நினைக்கிறேன். ஒருத்தவங்க கஷ்டப்படும்போது வீடியோ எடுக்கறாங்களே என்று அப்போ எனக்கு கஷ்டமா தான் இருந்தது. ஆனால், அங்கு இருக்க மக்கள் தான் எங்களுக்கு உதவி செய்தார்கள். ஆனால், அந்த பையன் எடுத்த வீடியோ எப்படியோ மீடியா கைக்கு போய் இருக்கு. இப்பல்லாம் காசு தான் எல்லாமே. எனக்கு தெரிஞ்சு எப்படியும் அது 18 லட்சத்துக்கான விளம்பரம் என்று கூறியுள்ளார்.