ஜெயில், விஜய் சேதுபதி – பகத் உறவு, கமலின் ரோல் – இது தான் விக்ரம் படத்தின் கதையாம். இணையத்தில் கசிந்த தகவல் இதோ.

0
344
vikram
- Advertisement -

அனைவரும் எதிர்பார்த்து கொண்டு இருக்கும் கமலின் விக்ரம் படம் பற்றிய கதை தற்போது சோசியல் மீடியாவில் கசிந்து உள்ளது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் லோகேஷ் கனகராஜ். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மாநகரம்’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். பின் முதல் படத்திலே சினிமா உலகில் தன்னை தனித்துவமாக அடையாளம் காணும் வகையில் மிக தரமான படத்தை கொடுத்து இருந்தார். அதனை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது.

-விளம்பரம்-
kamal haasan: விக்ரம் படத்தை முடிச்சுட்டுதான் மத்ததெல்லாம்: அதிரடி காட்டும்  ஆண்டவர்! - stunt masters anbariv joins kamal haasan vikram movie | Samayam  Tamil

பின் இவர் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய்யுடன் கூட்டணி அமைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி இருந்தார். மாஸ்டர் படமும் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்து இருந்தது. மேலும், தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில் உட்பட பல நடிகர்கள் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். க்ரிஷ் கங்காதரன் பட்டத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

- Advertisement -

விக்ரம் படத்தின் ரிலீஸ் தேதி:

மேலும், இந்த படம் 2022ஆம் ஆண்டு கோடையில் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. ஆனால், இன்னும் அதற்கான அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை. சமீபத்தில் தான் விக்ரம் படத்தின் போஸ்டர், First Glance வீடியோ எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இது மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தது. மேலும், விக்ரம் படத்தில் கேங்ஸ்டராக விஜய்சேதுபதி நடித்து உள்ளார். அதுமட்டும் இல்லாமல் இது கமலின் 232 படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்துள்ளது.

விக்ரம் படம் பற்றிய தகவல்:

நீண்ட எதிர்பார்ப்புகளுடன் இந்த படத்தை காண ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் விக்ரம் படம் குறித்த தகவல் ஒன்று தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால், வழக்கம்போல் விக்ரம் படத்தின் கதை கசிந்துள்ளது. கதைப்படி விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி ஜெயிலில் இருக்கிறார். அவரை வெளியில் கொண்டு வரும் அசைன்மென்ட் பகத் பாசிலுக்கு கொடுக்கப்படுகிறது. அதனால் அவரும் ஏதோ ஒரு குற்றத்தை செய்துவிட்டு ஜெயிலுக்கு செல்கிறார்.

-விளம்பரம்-

விக்ரம் படத்தின் கதை:

இவர்களின் இந்த தில்லாலங்கடி வேலைகளை தெரிந்து கொண்ட கமல் அவர்களின் இந்த முயற்சியை முறியடிக்க பார்க்கிறார். இதனால் கமலும் அதே ஜெயிலுக்கு செல்கிறார். இப்படியே முக்கால்வாசி கதை ஜெயிலில் தான் நகர்கிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது. அது மட்டுமில்லாமல் நீண்ட இடைவெளிக்கு பிறகு கமலஹாசனின் படம் வெளியாக இருப்பதால் ஒவ்வொரு ஆக்சன் காட்சிகளை எல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் எடுத்துள்ளார். கண்டிப்பாக இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று கூறப்படுகிறது.

கமலின் விக்ரம் ! சாதனை !! ரஜினி, விஜய், அஜித் படங்களை முந்தியது | Tamil  Movies - LYRICS.TAMILGOD.ORG

கமல்ஹாசனின் திரைப்பயணம்:

தமிழ் சினிமா உலகில் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். இவர் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் புகழ் பெற்ற கலைஞர். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றிருக்கிறது. கடைசியாக கமல் நடிப்பில் வெளிவந்த படம் விஸ்வரூபம்-2. அதற்கு பின்பு கமல் அவர்கள் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் படு பிசியாக இருந்தார். இதனால் நீண்ட காலமாக விக்ரம், இந்தியன் 2 படப்பிடிப்பும் தள்ளிக்கொண்டே போனது. தற்போது மும்முரமாக விக்ரம் படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

Advertisement