கொரோனாவிற்கு பயந்து நடிகர் கரண் சினிமாவை விட்டு பயந்து ஒளிந்து விட்டார் என்ற சர்ச்சைக்கு அவருடைய நண்பர் கொடுத்திருக்கும் விளக்கம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஒருவர் கரண். இவர் 1972 ஆம் ஆண்டிலேயே சினிமா உலகில் நுழைந்தார். இவர் சிறு வயதில் இருந்து தன்னுடைய திரை பயணத்தை தொடங்கினார். மாஸ்டர் ரகு என்ற பெயரில் மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் கிரண் அவர்கள் முத்துராமன், கே ஆர் விஜயா நடித்த முருகன் அடிமை என்ற படத்தின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். மேலும், இவர் சிறு வயதிலேயே நிறைய படங்களில் நடித்ததால் இவர் ஏராளமான குழந்தை நட்சத்திர விருதுகளும் வாங்கி இருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து இவர் சந்திரலேகா, கோயமுத்தூர் மாப்பிள்ளை, காதல் கோட்டை, காலமெல்லாம் காத்திருப்பேன், காலமெல்லாம் காதல் வாழ்க, நேருக்கு நேர், குங்குமப் பொட்டு கௌண்டர் போன்ற பல சூப்பர் ஹிட் தமிழ்ப் படங்களில் நடித்து இருக்கிறார். அதன் பின் இவர் கொக்கி திரைப்படம் மூலமாக ஹீரோ ஆனார். அதனை தொடர்ந்து இவர் கருப்பசாமி, காத்தவராயன், தம்பி வெட்டோத்தி சுந்தரம், சூரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். பெரும்பாலும் இவர் படங்களில் எதிர்மறை கதாபாத்திரங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் தான்நடித்து இருந்தார். கடைசியாக இவர் உச்சத்தில சிவா என்ற படத்தில் நடித்திருந்தார்.

Advertisement

நடிகர் கரண் குறித்த வதந்தி:

அந்த படத்திற்கு பிறகு இவர் எந்த படத்திலும் நடிக்கவில்லை. இதனால் இவரை பற்றி பல வதந்திகள் வந்தது. அதிலும், சில வாரங்களாகவே நடிகர் கருணை பற்றி தவறான தகவல்கள் சோசியல் மீடியாவில் உலா வந்து கொண்டிருக்கிறது. அதில் குறிப்பாக, கரண் கொரோனாவிற்கு பயந்து தான் அமெரிக்காவில் ஓடி ஒளிந்து விட்டார் என்றெல்லாம் கூறியிருந்தார்கள். இந்த நிலையில் நடிகரும், கரணின் நண்பர் ஒருவர் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர், நானும் திரை துறையில் இருப்பதால் திரை உலகம் சார்ந்த நண்பர்கள் பலர் எனக்கும் இருக்கிறார்கள்.

கரண் நண்பர் அளித்த பேட்டி:

எனக்கு நடிகர் கரணை கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு மேலாக தெரியும். அவருடைய தோற்றம் கம்பீரமாகவோ, திமிராகவோ தான் பிறருக்கு தோன்றும். ஆனால், அவரோடு பழகியவர்களுக்கு தான் தெரியும் அவர் ரொம்ப எளிமையானவர், அன்பாக சிரித்த முகத்தோடு அனைவரிடமும் பழகக் கூடியவர். பல வருடங்கள் அவர் தமிழ், மலையாளம் போன்ற மொழி படங்களில் பிசியாக நடித்திருந்தார். பல முன்னணி நடிகர்களுடன் கரண் நடித்திருக்கிறார். இவர் நடித்த பல கதாபாத்திரங்கள் ரசிகர்கள் மத்தியில் இன்றும் பேசப்பட்டு தான் இருக்கிறது. இவர் வில்லனாக மட்டுமில்லாமல் கதாநாயகனாகவும் பல படங்களில் நடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த உச்சத்தில சிவா படம் சரியாக போகவில்லை.

Advertisement

கரண் குறித்து சொன்னது:

அதனை அடுத்து நல்ல கதைக்காவும், சரியான வெற்றிக்காகவும் கரண் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தான் கொரோனா தொற்று வந்தது. இதனால் இவர் அமெரிக்காவில் போய் பதுங்கிக் கொண்டார் என்று பலரும் சோசியல் மீடியாவில் வதந்திகளை பகிர்ந்து இருந்தார்கள். ஆனால், இதை நான் முழுவதுமாக மறுக்கிறேன். காரணம், நானும் கிட்டத்தட்ட 20 வருடங்களாக அமெரிக்காவில் வசிக்கிறேன். நான் அங்கு ஹாலிவுட் படங்களில் பணிபுரிந்து கொண்டிருக்கிறேன். கரண் என்னுடைய நெருங்கிய குடும்ப நண்பர் என்ற வலையில் பல வேலைகளில் அவர் சந்தித்து திரையுலகம் சார்ந்த பல விஷயங்களை ஆர்வத்தோடு அவரிடம் விசாரிப்பேன். நானும் நடிகர் கரனோடு சில படங்களில் நடித்திருக்கிறேன்.

Advertisement

கரண் நண்பர் வைத்த கோரிக்கை:

கரண் இரண்டு மூன்று முறை அமெரிக்கா சென்றிருந்தது எனக்கும் தெரியும். அவருடைய அமெரிக்கா பயணம் அவரது சினிமா சார்ந்த அடுத்த கட்டத்துக்கு தான் தவிர அவர் ஒளிந்து கொள்வதற்காக இல்லை. இதை நான் ஆணித்தரமாக சொல்கிறேன். அவருடைய படத்தை பற்றிய அறிவிப்பு இன்னும் சில மாதங்களில் வெளிவர தான் போகிறது. அது மட்டுமில்லாமல் இந்த மாதிரியான தவறான தகவல்களை சோசியல் மீடியாவில் எழுத வேண்டாம் என்று பணிவாக கேட்டுக் கொள்கிறேன். ஒரு நடிகர், நடிகை மட்டும் இல்லாமல் எந்த துறையை சார்ந்தவராக இருந்தாலும் அவர்களை பற்றி நல்ல விஷயங்களை சொல்லுங்கள். தவறான கருத்துக்களை பரப்பாதீர்கள் என்று கூறியிருந்தார்.

Advertisement