நான் அவர விட height ஆகிட்டேன் அதனாலா – உயரமாக இருப்பதால் தனக்கு ஏற்பட்ட பிரச்சனை குறித்து பேசிய கார்த்தி.

0
200
Karthi
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் கார்த்தி. இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. தற்போது இவர் முத்தையா இயக்கத்தில் ‘விருமன்’ என்ற படத்தில் நடித்து இருக்கிறார். விருமன் படம் கிராமத்து கதையம்சத்தில் உருவாகி இருக்கிறது. இந்த படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.

-விளம்பரம்-

இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், சூரி, ராஜ்கிரண் என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக புதுமுக நடிகை அதிதி சங்கர் நடித்து இருக்கிறார். இவர் வேற யாரும் இல்லைங்க, பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் ஆவார். பொதுவாக, கார்த்தி ஏற்கனவே பணியாற்றிய இயக்குனர்களுடன் பணியாற்றியதில்லை. இந்த படத்தின் மூலம் முதன் முறையாக தன் முந்தய இயக்குனர் முத்தையாவுடன் கைகோர்த்து இருக்கிறார் கார்த்தி.

- Advertisement -

விருமன் படம்:

படத்தில் ஊர் தாசில்தாராக இருக்கும் பிரகாஷ்ராஜுக்கு நான்கு மகன்கள் இருக்கின்றனர். அதில், கடைசி மகன் தான் கார்த்தி. கார்த்தியின் தாயாராக சரண்யா பொன்வண்ணன் நடித்திருக்கிறார். கார்த்தியின் தன் தந்தையை விட தாய் மீது தான் அதிகம் பாசம் வைத்து இருக்கிறார். ஒரு கட்டத்தில் சரண்யா பொன்வண்ணன் இறந்து விடுகிறார். தன்னுடைய தாயார் சரண்யா பொன்வானனின் இறப்பிற்கு பிரகாஷ்ராஜ் காரணமாக இருப்பதால் அவரை கொல்ல வேண்டும் என்று கோபத்துடன் கார்த்தி இருக்கிறார்.

படத்தின் கதை:

இதனால் இவர்கள் குடும்பத்திலேயே பல பிரச்சனைகள் வெடிக்கின்றது. கார்த்தியின் செயல்களால் கோபமடையும் பிரகாஷ்ராஜ் கார்த்தியை ஏமாற்றி அவரது தாயார் சரண்யா பொன்வண்ணன் பெயரில் அவரது சொத்துக்களை அபகரிக்க முயற்சி செய்கிறார். இறுதியில் சரண்யா பொன்வண்ணனின் இறப்பிற்கு என்ன காரணம் ? தன்னுடைய தந்தை பிரகாஷ்ராஜை கார்த்தி கொலை செய்தாரா? இல்லை குடும்பத்துடன் மீண்டும் இணைந்தாரா? என்பதே படத்தின் மீதி கதை. மேலும், படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

-விளம்பரம்-

ரசிகர்கள் பிரஸ்மீட்:

இந்நிலையில் விருமன் படத்திற்கான காண ரசிகர்கள் சந்திப்பில் கார்த்தி மற்றும் அதிதி கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது கார்த்தி கூறியிருந்தது, சிறு வயதில் எனக்கும் அண்ணனுக்கும் பயங்கர சண்டை வரும். நான் டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது அவர் உள்ளே நுழைந்தாலே போதும் அந்த அறை முழுவதும் தீயாயிருக்கும். காரணம் ரிமோட்டுக்காக சண்டை. முதலில் அவர் ரிமோட்டை தான் எடுப்பார். அதேபோல் அண்ணன் தம்பி இருக்கும் வீட்டில் ஒரே மாதிரி சட்டையை எடுத்துப் போடுவார்கள்.

சூர்யா உயரம் குறித்து கார்த்தி சொன்னது:

அப்போது நான் அவர் என்ன மாதிரி சட்டை போடுகிறாரோ அதையே காப்பி பண்ணி போடுவேன். உடனே அவர் அதை மாற்றி போடு என்று சண்டை வரும். அதோடு இன்னொரு ப்ளஸ் பாயிண்ட் என்னவென்றால், நான் அவரை விட உயரம் அதிகம். அதனால் என்னுடைய சட்டைகள் எல்லாம் அவருக்கு செட்டாகும். ஆனால், அவருடைய சட்டைகள் எதுவும் எனக்கு செட்டாகாது. இதே மாதிரி பல சண்டைகள் எங்களுக்கு வந்திருக்கிறது என்று தன்னுடைய சிறுவயது நினைவுகளை கார்த்தி பகிர்ந்திருக்கிறார்.

Advertisement