லட்டு விவாகரத்துக்கு பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி- அதிருப்தியில் ரசிகர்கள்

0
484
- Advertisement -

பவன் கல்யாண் இடம் மன்னிப்பு கேட்டு நடிகர் கார்த்தி போட்டிருக்கும் பதிவு தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்திக். இவரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. ஆனால், கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான ‘ஜப்பான்’ திரைப்படம் படும் தோல்வி அடைந்தது.

-விளம்பரம்-

ஜப்பான் திரைப்படம் நடிகர் கார்த்தியின் 25 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, கார்த்தி நடிப்பில் இயக்குனர் பிரேம்குமாரின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் தான் ‘மெய்யழகன்’. பிரேம்குமார் அவர்கள் விஜய் சேதுபதி- திரிஷா நடித்து கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த ’96’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தற்போது ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இவர் மெய்யழகன் படத்தை இயக்கியுள்ளார்.

- Advertisement -

மெய்யழகன் படம்:

இப்படத்தில் நடிகர் அரவிந்த்சாமி, கார்த்தி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். மேலும், இவர்களுடன் இந்த படத்தில் ஸ்ரீ திவ்யா, ராஜ்கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படத்தை சூர்யா- ஜோதிகாவின் 2டி நிறுவனம் தயாரித்துள்ளது. 96 திரைப்படத்திற்கு இசையமைத்த கோவிந்த் வசந்தா தான் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது.

படம் குறித்த தகவல்:

ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்த நிலையில் சில தினங்களுக்கு முன் தான் இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிக்காக படக்குழுவினர் மும்முறமாக ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் இந்த படத்திற்கான ப்ரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்று இருந்தது. அப்போது நிகழ்ச்சியில் தொகுப்பாளர், நடிகர் கார்த்தி இடம் லட்டு வேண்டுமா? என்று பேசி இருந்தார்.

-விளம்பரம்-

கார்த்தி சொன்ன வார்த்தை:

அதற்கு கார்த்திக், லட்டு வேண்டாம். இப்போது அது சென்சிட்டிவான விஷயம். அதை பற்றி பேசாதீர்கள். எனக்கு லட்டு வேண்டாம் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசியிருக்கும் வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி இருக்கிறது. அதோடு ஆந்திராவில் நடந்த லட்டு விவகாரத்தை தான் கார்த்தி கிண்டல் செய்திருக்கிறார் என்றெல்லாம் கூறி வருகிறார்கள். இதை அடுத்து இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் பேட்டியில், லட்டு விவகாரத்தை பலரும் கேலி செய்வதை என்னால் பார்க்க முடிகிறது.

பவன் கல்யாண் பேட்டி:

சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சியில் கூட லட்டு சென்சிடியூவ் டாபிக் என்று கூறியிருந்தார்கள். ஒரு நடிகராக நான் உங்களை மதிக்கிறேன். ஆனால், சனாதான தர்மம் என்று வரும்போது ஒரு வார்த்தை பேசுவதற்கு முன்பு 100 முறை யோசிக்க வேண்டும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார். இதை அடுத்து நடிகர் கார்த்தி வருத்தம் தெரிவித்து பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில், அன்புள்ள பவன் கல்யாண் அவர்களே, நான் உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடேஸ்வராவின் பக்தனாக நமது கலாச்சாரத்தை எப்போதும் கடைபிடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

Advertisement