சிவகுமார் வீட்டில் விஷேசம் – மீண்டும் அப்பாவாகப்போகும் மகன். யார் தெரியுமா ?

0
1167
karthi

தமிழ் சினிமாவின் 80 காலகட்டம் துவங்கி இன்று வரை பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகுமார். இவரது மகன்களான சூர்யா, கார்த்தி இருவருமே இன்று தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர்களாக திகழ்ந்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான். கார்த்தியின் மூத்த மகனான சூர்யா ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டார். மேலும், இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.

Actor Sivakumar Family Photoshoot

அதே போல கார்த்தி நடிகர் கார்த்தி கடந்த 2011-ம் ஆண்டு ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் பார்த்து நிச்சயித்த இந்தத் திருமணம் கோயம்புத்தூரில் நடந்தது. ரஞ்சனி கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர். இத்தம்பதியருக்கு 2013-ம் ஆண்டு இவர்களுக்கு ஒரு மகளும் பிறந்தனர். அவருடைய பெயர் உமையாள்.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகர் சிவகுமார் மீண்டும் தாத்தா ஆக போகிறார். ஆம், நடிகர் கார்த்தியின் மனைவி ரஞ்சனி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி அவர்கள் முதன் முதலாக பிரபல இயக்குனர் மணிரத்தினத்திடம் தான் உதவி இயக்குனராக பணி புரிந்தார். பின் இவர் இயக்குனர் அமீரின் இயக்கத்தில் வெளிவந்த “பருத்திவீரன்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.

இவர் நடித்த முதல் படமே மாபெரும் வெற்றியை பெற்று தந்தது. அதன் பின் செல்வராகவன் இயக்கத்தில் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் நடித்தார். அதிலும் கார்த்திக்கு மிக பெரிய வெற்றி கிடைத்தது. இதனை தொடர்ந்து பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, பிரியாணி, மெட்ராஸ், கொம்பன், தோழா, காஷ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

-விளம்பரம்-
Advertisement