அரவிந்த்சாமி, கார்த்தி கூட்டணி கை கொடுத்ததா? மெய்யழகன் படம் எப்படி இருக்கு- முழு விமர்சனம் இதோ

0
275
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர்களாக திகழும் அரவிந்த்சாமி- கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மெய்யழகன்’. இந்த படத்தை 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைத்து இருக்கிறார். பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று வெளியாகிருக்கும் மெய்யழகன் படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

கதைக்களம்:

படத்தில் நடிகர் அரவிந்த்சாமி சொத்து பிரச்சனையின் காரணமாக உறவினர்களுடன் சண்டை போட்டு தன்னுடைய சின்ன வயதிலேயே, தான் உயிருக்கு உயிராக நேசித்த வீட்டையுமே காலி செய்து விட்டு குடும்பத்துடன் சென்னைக்கு சென்று விடுகிறார். பின் தங்கையுடைய திருமணத்திற்காக 22 வருடங்கள் கழித்து தன்னுடைய சொந்த ஊருக்கு வர வேண்டிய கட்டாயம் வருகிறது. அப்போது தான் கார்த்திக் உடைய என்ட்ரி ஆரம்பிக்கிறது.

- Advertisement -

‘அத்தான் அத்தான்’ என்று அரவிந்த் சுவாமியை சுற்றி சுற்றி கார்த்திக செல்கிறார். ஆனால், அவரின் பெயரை தவிர வேற ஒன்றும் அரவிந்தசாமிக்கு தெரியவில்லை. இருந்தாலும் கார்த்தி மனது கஷ்டப்படக்கூடாது என்பதற்காக தெரிந்தது போல காட்டிக் கொள்கிறார் அரவிந்த்சாமி. பின் கார்த்தியால் சென்னைக்கு போகும் பஸ்ஸை அரவிந்த்சாமி தவறவிடுகிறார். அதற்குப்பின் அவருடனே அரவிந்த்சாமி தங்கியும் விடுகிறார்.

ஒரு நாள் இரவு முழுவதும் கார்த்திக்குடன் குடித்துவிட்டு, அரட்டை அடித்து கொண்டு அரவிந்த்சாமி தன்னுடைய பழைய விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொள்கிறார். ஒரு கட்டத்தில் தன் மீது பாசமாக இருக்கும் கார்த்தியை பற்றி எதுவுமே நமக்கு தெரியவில்லையே என்ற வேதனையில் அவரிடம் சொல்லாமலேயே வீட்டில் இருந்து அரவிந்த்சாமி கிளம்பி விடுகிறார். கடைசியில் கார்த்தி யார் என்று அரவிந்த்சாமி தெரிந்து கொண்டாரா? கார்த்திக்கும் அரவிந்த்சாமிக்கும் என்ன சம்பந்தம்? என்பதே படத்தின் மீதி கதை.

-விளம்பரம்-

ஊர் பாசம், சொந்த பந்தம், நட்பு என்ற அனைத்துமே இயக்குனர் எதார்த்தமான வாழ்க்கையில் நடக்கும் பல விஷயங்களை காண்பித்து இருக்கிறார். 96 படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளி எடுத்துக் கொண்ட இயக்குனர் இந்த படத்தில் மீண்டும் மக்களை கவர்ந்தார் என்று சொல்லலாம். ஆரம்பம் முதல் கடைசி வரை வியக்க வைக்கும் அளவிற்கு கதையை கொண்டு சென்றிருக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையும், காட்சிகளையும், வசனங்கள், காமெடிகள் என ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து காண்பித்து இருக்கிறார்.

மெய்யழகன் படத்தில் வருவது போல நிஜத்திலும் ஒரு ஆள் இருந்தால் எப்படி என்று யோசிக்கும் அளவிற்கு கார்த்தியின் கதாபாத்திரமும், அவருடைய நடிப்பும் இருந்தது. அரவிந்த் சுவாமி தன்னுடைய அனுபவ நடிப்பை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். இவர்களை தொடர்ந்து படத்தில் வரும் ராஜ்கிரன், ஸ்ரீதிவ்யா, தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ் ஆகியோரும் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். குறிப்பாக ஒரே ஒரு இரவில் நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே பாராட்டும் வகையில் இருக்கிறது.

சண்டை, ரொமான்ஸ், பாடல்கள் எதுவுமே இல்லை என்றாலும் அனைவரையும் படத்தின் மீது கவனத்தை வைக்கும் மாதிரி இயக்குனர் கையாண்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. ஒரு சில காட்சிகள் எல்லாம் உணர்வுபூர்வமாக அழுகை வர வைக்கும் அளவில் இருக்கிறது. கோவிந்த் வசந்தாவுடைய பின்னணி இசை இருக்கிறது. ஆனால், படத்தினுடைய நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

மூணு மணி நேரம் என்பது ரசிகர்களை சீக்கிரம் கவராது. அதேபோல் கார்த்தி- அரவிந்த்சாமிக்கு இடையே இருக்கும் உறவை அழுத்தமாக கொடுத்து இருந்திருக்கலாம். மொத்தத்தில் எல்லோரையும் மீண்டும் பழைய நினைவுக்கு கொண்டு செல்லும் வகையில் படம் நன்றாக இருக்கிறது.

நிறை:

கார்த்திக், அரவிந்த்சாமி நடிப்பு சூப்பர்

கதைக்களம் அருமை

பின்னணி இசை, ஒளிப்பதிவு நன்றாக இருக்கிறது

வசனங்கள், காமெடி காட்சிகள் எல்லாமே நன்றாக இருக்கிறது

குறை:

படத்தின் நீளத்தை குறைத்திருக்கலாம்

அரவிந்த்சாமி, கார்த்தியினுடைய உறவை ஆழமாக கொடுத்திருக்கலாம்

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிய குறைகள் எதுவும் இல்லை

மொத்தத்தில் மெய்யழகன்- மெய்சிலிர்க்க வைத்து விட்டார்

Advertisement