அதெல்லாம் எனக்கு தமிழ்ல கிடைக்காது. தெலுங்கு ரசிகர்களை விட தமிழ் ரசிகர்கள் தான் பிடிக்கும் – வைரலாகும் கார்த்தியின் வீடியோ.

0
710
surya

சமீப காலமாக நடிகர் சூர்யாவின் குடும்பத்தினர் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வருகின்றனர். சிவகுமாரின் செல்ஃபீ பிரச்சனை துவங்கி சமீபத்தில் சூர்யாவின் neet அறிக்கை வரை பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது சிவகுமாரின் குடும்பம். அதே போல தஞ்சை பெரிய கோவில் விவகாரம், பொன்மகள் வந்தால் Ott பிரச்சனை என்று ஜோதிகா கூட சில சர்ச்சைகளில் சிக்கி இருந்தார். சிவகுமார் குடும்பத்தில் கார்த்தி மட்டும் இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருந்தார்.

தற்போது அவரும் இந்தி மொழி பிரச்னையில் சிக்கியுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இந்தியை கட்டாய படமாக படிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டது. மேலும், தேசிய கல்வி கொள்கையில், நாடு முழுவதும் மும்மொழி கொள்கையை அமல்படுத்துமாறு பரிந்துரை செய்யப்பட்டது.பல மாநிலங்கள் இந்த கொள்கையை ஏற்ற நிலையில், இந்த கொள்கை இந்தியை திணிக்கும் முயற்சி என தமிழகம் உட்பட நாட்டின் பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

- Advertisement -

தமிழகத்தில் தற்போது மீண்டும் இந்தி எதிர்ப்பு அரசியல் தலை தூக்க துவங்கி உள்ளது.தமிழ் சினிமாவில் இருக்கும் பல்வேறு பிரபலங்கள் கூட இந்தி தெரியாது போடா என்ற வாசகம் அடங்கிய டி-ஷர்ட்டை அணிந்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வந்தனர். இவர்களுக்கு எல்லாம் அடிக்கடி Bjpயை சார்ந்த சில நபர்கள் பதிலடி கொடுக்கும் விதமாக சில பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

இப்படி ஒரு நிலையில் நடிகை கார்த்தி இந்தி மொழி குறித்தும், தெலுங்கு மொழி குறித்தும் பேசிய வீடியோ ஒன்றை BJP யை சேர்ந்த வினோத் பி செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள கார்த்தி, வெவ்வேறு மொழிகளில் பிறரை தொடர்பு கொள்வது எனக்கு பெருமை அளிக்கிறது. எனக்கு பிரென்ச் மொழியின் உச்சரிப்பு என்றால் மிகவும் பிடிக்கும் தற்போது பிரெஞ்சு மொழியை கற்று வருகிறேன். அதேபோல ஹிந்தி மொழி என்னால் புரிந்துகொள்ள முடியும் அதையும் நான் இப்போது கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளேன்.

-விளம்பரம்-

என்னுடைய மகள் கூட ஒரு ஐந்து ஆறு மொழிகளைப் பேச வேண்டும் என்று எனக்கு ஆசை. தற்போது அதற்கான பயிற்சிகளை ஆரம்பித்திருக்கிறார் என்று கூறி இருக்கிறார் கார்த்திக். அதேபோல தெலுங்கு விழா ஒன்றில் பங்கேற்றுள்ள கார்த்திக்கிடம் பெண் ஒருவர் உங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மிகவும் பிடிக்குமா? இல்லை தெலுங்கு ரசிகர்கள் மிகவும் பிடிக்குமா? என்று கேள்வி கேட்கிறார் அதற்கு நடிகர் கார்த்தி கண்டிப்பாக தெலுங்கு ரசிகர்கள் தான் என்று கூறுகிறார். இந்த வீடியோவிற்கு தலைப்பாக இரட்டை வேஷத்தை ததொளுரித்த அறிஞர்கள் என்ற தலைப்பையும் கொடுத்திருக்கிறார்கள்

Advertisement