தீரன் படத்திற்கு பிறகு கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கடைக்குட்டி சிங்கம். சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். சாயிஷா, கார்த்திக்கு ஜோடியாக நடிக்கத் தமிழ் சினிமாவின் லேட்டஸ்ட் வரவான பிரியா பவானிசங்கர், அர்த்தனா பினு ஆகியோர் நடித்துள்ளனர்.
இவர்களைத் தவிர சத்யராஜ், பானுப்ரியா, விஜி சந்திரசேகர், பொன்வண்ணன், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் டீஸர் இன்று வெளியாகி உள்ளது. இந்தப் படத்தில் கார்த்தி விவசாயியாக நடித்துள்ளார்.
விவசாயத்திற்கும், கூட்டுக் குடும்பத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து படத்தின் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. வழக்கமான தனது பாணியில் விவசாயத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இயக்குநர் பாண்டிராஜ் வசனங்கள் எழுதியுள்ளார். தற்போது இந்த டீஸர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது.