விஜயை வம்பிழுத்த கருணாகரன் அஜித்தின் விஸ்வாசம் பற்றி என்ன சொன்னார் தெரியுமா.!

0
646
Karuakaran

சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற “சர்கார்” இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் பேச்சு குறித்து நடிகர் கருணாகரன் வெளியிட்ட ட்வீட், விஜய் ரசிகர்கள் மத்தியில் கடும்சர்ச்சையை உருவாக்கியது. இதனால் விஜய் ரசிகர்கள் அவருடைய ட்விட்டர் பக்கத்தைக் குறிப்பிட்டு கடுமையாக திட்டித் தீர்த்தார்கள்.

விஜய் ரசிகர்களிடன் தொடர்ந்து ட்விட்டரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததால் கடும் கோபமடைந்த விஜய் ரசிகர்கள் நடிகர் கருணாகரனுக்கு எதிராக ஹேஷ்டேக்கை உருவாக்கி தொடர்ச்சியாக திட்டி தீர்த்தனர். ஹேஷ்டேக்கை நடிகர் கருணாகரனுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்களை உருவாக்கினர்.

இதையும் படியுங்க : முதன்முறையாக தன் அழகான மனைவி ,மகளை வெளியுலகத்துக்கு காட்டிய கருணாகரன் !

- Advertisement -

இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் தற்போது கருணாகரன் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தை பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்துள்ளார். பேட்ட படத்துடன் வெளியான விஸ்வாசம் திரைப்படம் இதுவரை 125 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த தகவலை நேற்று (ஜனவரி 17) Kjr நிறுவனம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்துவந்த நிலையில் நடிகர் கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பதுங்கி பாஞ்ச சிவா தான் சிறுத்தை’ என்று பதிவிட்டுள்ளார். பேட்ட படத்தில் ‘கொஞ்சம் பதிங்கிரு’ என்ற பாடலும் இடம் பெற்றது. இதனால் பேட்ட படத்தை தான் கருணாகரன் கலாய்க்கிறார் என்று பலரும் ட்வீட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement