தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ், இதுவரை பல்வேறு முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருந்தாலும் இவரை பற்றிய மீம்களை நெட்டிசன்கள் தவராமால் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
அதற்கு முக்கிய காரணமே அம்மணியின் ஓவர் டோஸேஜ் எக்ஸ்பிரஸின் தான்.அதிலும் இவர் தனுசுடன் தொடரி படத்தில் நடித்த பிறகு தான் இவரை பற்றிய மீம்கள் அதிகம் பரவி வந்தது. அது போக அம்மணி நடித்த கடைசி இரண்டு படத்திலும் பெயர் சொல்லும்படி கதாபாத்திரம் அமையவில்லை.
விஷுலுடம் சண்டக்கோழி, விஜயுடன் ‘சர்கார்’ என்று தொடர்ந்து இரண்டு படங்கள் வெளியானாலும், இரண்டு படத்திலும் அம்மணியை கலாய்த்து பல மீம்கள் வெளிவர படும் அப்செட் அடைந்துள்ளார் கீர்த்தி. இதுகுறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர், ‘சர்கார்’ படத்தில் என் கேரக்டர் டம்மியாக அமைந்துவிட்டதற்கு எல்லோரும் கிண்டலடிக்கிறார்கள். படப்பிடிப்பு நடந்தபோதே இதை உணர்ந்திருக்கவே செய்தேன்.
இயக்குநர் முருகதாஸும் ஒரு கட்டத்தில் எனக்கு கதையில் வேலையே இல்லை என்பதைப்புரிந்துகொண்டு, அடுத்த படத்துல உனக்கு பிரமாதமான கேரக்டர் குடுக்கிறேன் என்று என்னை சாதனம் செய்தார். ‘சண்டக்கோழி2’வும் என்னைக் கவிழ்த்துவிட்டது. அதன் முதல் பாகத்தில் மீரா ஜாஸ்மின் அதகளம் பண்ணியிருந்தார். அவரை ஜெயிக்க முடியாது என்று தெரிந்தும் ஏன் படத்தை ஒப்புக்கொண்டேன் என்று இன்றுவரை புரியவில்லை என்று புளும்பியுள்ளார் கீர்த்தி. இருப்பினும் அடுத்தடுத்த படங்களின் கதைகளை கேட்டு வருகிறாராம். அம்மணி 20 படத்திற்கு மேல் கதை கேட்டுள்ளாராம்.