குரூப் டான்சராக இருந்துள்ள பிரபல நடிகர் – 1500 ரூபாய் கொடுத்தாங்கலாம். அட யாருனு தெரியலயா?

0
14941
krishna

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்பவர் மணிரத்தினம். இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று உள்ளது. அந்த வகையில் 1990 ஆம் ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த அஞ்சலி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படத்தில் ஷாமிலி, ரகுவரன், ரேவதி, பிரபு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் கிருஷ்ணா. இவர் இயக்குனர் விஷ்ணு வர்த்தனின் சகோதரர் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

Image

இதனைத் தொடர்ந்து இவர் சில படங்களில் நடித்து வந்தார். பின்பு அலிபாபா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கினார் கிருஷ்ணா. பிறகு இவர் கழுகு, யாமிருக்க பயமேன், வானவராயன் வல்லவராயன், பண்டிகை போன்ற பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். சமீபத்தில் கூட தனுஷின் நடிப்பில் வெளிவந்து பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்த மாரி 2 படத்தில் கிருஷ்ணா முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் கிருஷ்ணா அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பழைய புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் நான் எங்கிருக்கிறேன் கண்டுபிடியுங்கள் என்று கூறிவிட்டு நான் குரூப் டான்ஸராக இருந்தேன். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது இந்த நிகழ்ச்சிக்காக எனக்கு 1500 ரூபாய் வழங்கப்பட்டது.

நான் நிறைய ஸ்டார் நைட் ஷோவில் குரூப் டான்ஸராக பங்கேற்று உள்ளேன் என்றும் குறிப்பிட்டிருந்தார். தற்போது இந்த புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது இவர் கழுகு இரண்டாம் பாகம் படத்தில் நடித்து உள்ளார். இந்த படம் கூடிய விரைவில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக பிந்து இந்த நடித்து உள்ளார்.

-விளம்பரம்-
Advertisement