பிரபல காமெடி நடிகர் கிருஷ்ண மூர்த்தி மரணம்.! படப்பிடிப்பின் போது ஏற்பட்ட சோகம்.!

0
4276
krishna-moorthi

தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகர்கள் இருந்தாலும் அவர்களது படங்களில் துணை காமெடி நடிகர்களாக நடித்து மக்கள் மனதில் பிரபலமான நடிகர்கள் எத்தனையோ நபர்கள் இருக்கின்றனர். அந்த வகையில் தமிழில் விவேக், வடிவேலு, சந்தானம் என்று பல்வேறு காமெடி நடிகர்களின் படங்களில் துணை காமெடி நடிகராக நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் காமெடி நடிகர் கிருஷ்ண மூர்த்தி. இவர், இன்று மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் தமிழ் திரையுலகை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தமிழில் வெளியான ராசைய்யா, தவசி, கருப்பசாமி குத்தகைதாரர்,இங்கிலிஷ் காரன், போன்ற பல்வேறு படங்களில் துணை காமெடியனாக நடித்துள்ளார் நடிகர் கிருஷ்ண மூர்த்தி. இவர் பல்வேறு படங்களில் நடித்திருந்தலாம் மக்கள் மனதில் பெரும் பிரபலமடைந்தது தவசி படத்தில் தான். அந்த படத்தில் எஸ்க்யூஸ்மி, இவர் அட்ரஸ் தெரியுமா? என்று வடிவேலுவிடம் பின்லேடன் முகவரி கேட்பவராக நடித்திருப்பார். ’எல்லாம் அவன் செயல்’ படத்தில் வடிவேலுவை அரிவாளால் மிரட்டுபவராகவும் நடித்திருப்பார். இவர் நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களால் அதிகமாக ரசிக்கப்பட்டது.

- Advertisement -

மேலும், வடிவேலு காமெடி குழுவில் இருந்து வந்த இவர் புரொடக்ஷன் மேனஜராகவும் இருந்து வந்தார். இதனால் அவ்வப்போது சினிமா தயாரிப்பு நிறுவனத்தில் கூட பணியாற்றி வந்தார். இதுவரை பல்வேறு திரைப்படங்களில் புரொடக்ஷன் மேனஜராகவும் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் நேற்று தேனீ மாவட்டம் குமுளியில் நடைபெற்று வந்த ஒரு படத்தின் படப்பிடிப்பில் கடந்து கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை அவருக்கு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை மருத்துவமனைக்கு படக்குழு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், எதிர்பாராத விதமாக அவர் இன்று காலை 4.30 மணியளவில் இருந்து விட்டார். இந்த செய்தி பட குழுவினரை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் கிருஷ்ணமூர்த்தியின் மறைவிற்கு தமிழ் திரைப்பட நடிகர்கள் அனைவரும் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement