தனது தந்தையின் இறுதி நொடிகள் – கும்கி நடிகர் உருக்கமான பேட்டி.

0
1098
swaminathan
- Advertisement -

நாடு முழுவதும் கொரானாவின் தாக்கம் மின்னலைப் போல் பரவிக் கொண்டு வருகின்றது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டே செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இன்னும் கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை என்பதால் மக்கள் அனைவரும் கவலையில் உள்ளார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என யாரையும் பாரபட்சம் பார்க்காமல் கொரோனா தாக்கிக் கொண்டு வருகின்றது.

-விளம்பரம்-

இந்த நிலையில் நடிகரும் தயாரிப்பாளருமான ஸ்வாமிநாதன் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளரான ஸ்வாமிநாதன் பிரபல தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவி மேக்கர்ஸ்ஸின் உரிமையாளர் ஆவார். இவரது தயாரிப்பில் பகவதி, அன்பே சிவம், புதுப்பேட்டை போன்ற படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருந்தது.

- Advertisement -

தயாரிப்பாளர் சுவாமிநாதனுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இளைய மகன் அஸ்வின் லட்சுமி மூவி மேக்கர் தயாரித்து இருந்த பாஸ் என்கிற பாஸ்கிரன் படத்தில் நடிகராக அறிமுகமானார். மேலும், கும்கி படத்தில் கூட காமெடியனாக நடித்திருந்தார். நடிகர் அஸ்வினுக்கு கடந்த ஜூன் மாதம் 24 ஆம் தேதி தான் திருமணம் நடைபெற்றது.இப்படி ஒரு நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அஸ்வின் தனது தந்தையின் இறுதி நொடிகள் பற்றி கூறியுள்ளார்.

அதில், கொரோனா தொற்று வந்ததும் அவரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது திடீரென்று அவருக்கு பிராணவாயு கம்மியானதாக சொன்னார்கள். நான் சினிமாவில் தான் நான் இப்படி எல்லாம் பார்த்து இருக்கிறேன். ஆனால், இப்போது தான் நேரில் பார்க்கிறேன். அவரை அப்பா அப்பா என்று கூப்பிட்டுகொண்டே இருந்தேன் என்று வருத்தத்துடன் கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement