பிறந்தநாளன்று வாழ்த்துக்களை அல்ல பாராட்டுக்களை பெரும் நடிகர் லாரன்ஸ்..!பாராட்டக் கூடிய விஷயம் தான்..!

0
2
lawrance
- Advertisement -

தமிழ் சினிமாவில் ராகவா லாரன்ஸ் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. ஒரு சாதரண நடன கலைஞராக தனது சினிமா பயணத்தை தொடங்கிய லாரன்ஸ் பின்பு ஹீரோ, இயக்கம் என பன்முக கலைஞராக திகழ்ந்து வருகிறார்.

திரைப்படங்களையும் தாண்டி ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் அறக்கட்டடளை மூலம் பல்வேறு நல திட்ட உதவிகளை புரிந்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் கேரளாவில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்பிற்காக 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்திருந்தார்.

தமிழ் நடிகர்களிலேயே அதிக நிதியுதவி அளித்த லாரன்ஸை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வந்தனர்.இந்நிலையில் நடிகர் லாரன்ஸ் இன்று (அக்டொபேர் 29) தனது 42 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அதனை முன்னிட்டு பாடி மற்றும் செஞ்சியில் உள்ள இரண்டு பள்ளிக்கூடங்களை தத்தெடுத்து அதனை புதுப்பிக்கவுள்ளார்.

- Advertisement -

அதே போல லாவரன்ஸ்ஸின் பிறந்தநாளான இன்று அசோக் நகரில் இயங்கி வரும் லாரன்ஸ் தொண்டு நிறுவனம் சார்பாக ஒரு குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. இது லாரன்ஸ் தொண்டு நிறுவனம் சார்பாக செய்யும் 150 வது அறுவை சிகிச்சை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement