45 டாக்டர் செத்துட்டாங்க, உங்களாக கறி சாப்பிடாம இருக்க முடியாதா – நர்ஸ் வெளியிட்ட கண்ணீர் வீடியோ. மாதவன் கேட்ட மன்னிப்பு.

0
3195
madhavan
- Advertisement -

நடுமுழுதும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கொரோனாவின் கோர தாண்டவம் முடிவில்லாமல் தொடர்ந்து வருகிறது. இந்த நோயினால் இந்தியாவில் பல லட்சம் பேர் பலியான நிலையில் தமிழகத்தில் தற்போது இந்த வைரஸ் தீவிரமடைந்து உள்ளது.கொரோனா நோயை கட்டுப்படுத்த, உலகம் முழுக்க தடுப்பூசிகள், மருந்துகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகின்றன. இந்தியாவில் பரவியுள்ள உருமாறிய கொரோனா மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகிறது. தமிழகத்தில் சென்னை உள்பட 8 மாவட்டங்களில் கொரோனா தினசரி பாதிப்பு ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.

-விளம்பரம்-

தமிழகத்தில் இன்று இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் தினசரி கொரோனா பாதிப்பு 34875 ஆக பதிவாகியுள்ளது. 23863 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 365 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட 253576 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களை பல லட்ச மருத்துவர்களும் செவிலியரும் போராடி காப்பாற்றி வருகின்றனர்.

இதையும் பாருங்க : தன்னை அறிமுகப்படுத்தியவரிடமே நித்யானந்தாவின் புத்தகத்தை கொடுத்துள்ள ரஞ்சிதா – அவர் என்ன பண்ணி இருக்கார் பாருங்க.

- Advertisement -

அதே போல கொரோனா பிரிவில் தொடர்ந்து பணியாற்றி வரும் பல்வேறு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தொடர் பணி சுமை காரணமாக மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தாலும் மக்கள் மத்தியில் இன்னமும் அலட்சியம் காட்டப்பட்டு வருகிறது.இதனால் அரசும் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திய தான் வருகிறது.

இப்படி ஒரு நிலையில் செவிலியர் ஒருவர், முன்கள பணியாளர்கள் சந்தித்து வரும் பிரச்சனை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார்.இந்த வீடியோவில் டாக்டர்கள் மற்றும் நர்ஸ்கள் படும் கஷ்டத்தை பற்றி பேசி இருந்தார். இந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள மாதவன், தயவுசெய்து எங்களை மன்னியுங்கள். நாங்கள் உங்களுக்கு நித்தியமாக கடன்பட்டிருக்கிறோம் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement