மாதவனின் லேட்டஸ்ட் இன்ஸ்டா பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டவர்.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ என்ற படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.
இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இடையில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் தற்போது படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
மாதவன் திரைப்பயணம்:
அதிலும் சமீப காலமாக மாதவன் நடித்த விக்ரம் வேதா, இறுதி சுற்று, மாறா போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. ஆரம்பத்தில் சினிமாவில் நுழைந்த போது சாக்லட் பாய் என்ற முத்திரையுடன் வந்த மாதவன் தற்போது ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார். தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த 2022 ஆம் ஆண்டு மாதவன் நடிப்பில் வெளியாகியிருந்த ராக்கெட் நம்பி விளைவு படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.
மாதவன் பதிவு:
இந்த படத்தின் மூலம் மாதவன் இயக்குனராக அவதாரம் எடுத்திருந்தார். இந்த படம் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் வெளியான இந்த படத்துக்கு தேசிய விருதும் கிடைத்து இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் மாதவன் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
மாதவன் லட்சியம்:
அதாவது, 28 வருடங்களுக்கு முன்பு தன்னுடைய படப்பிடிப்பு சமயத்தில் தன்னுடைய லட்சியம் குறித்து ஆண்டு புத்தகத்தில் மாதவன் குறிப்பிட்டு இருக்கும் விஷயத்தை தான் இன்ஸ்டாவில் போட்டு இருக்கிறார். அந்த புகைப்படத்தில் மாதவனின் படத்திற்கு பக்கத்தில் லட்சியம் என்று குறிப்பிட்ட இடத்தில் பணக்காரராகவும், பிரபல நடிகராகவும் ஆக வேண்டும்.
மாதவன் சொன்னது:
அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும். சிலவற்றில் மாஸ்டராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இதை தான் மாதவன், பதிவிட்டு நான் எழுதிய லட்சியத்தில் கொஞ்சமாவது சாத்தியமாகி இருக்கிறது என்று கூறி இருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.