தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் மதுரை மோகன் இறந்து இருக்கும் தகவல் தான் தற்போது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழ் சினிமாவில் உள்ள சிறந்த பல கலைஞர்களை இந்த ஆண்டு இறந்து இருக்கிறார்கள். இது மிகப்பெரிய அதிர்ச்சியை கோலிவுட் வட்டாரத்தில் கொடுத்திருக்கிறது.

மனோ பாலா, மயில்சாமி, மாரிமுத்து, ஆர் எஸ் சிவாஜி, ஜூனியர் பாலையா போட்ட பல பிரபலமான நடிகர்கள் இந்த ஆண்டு உடல்நல குறைவால் இறந்து இருக்கிறார்கள். இவர்களுடைய இழப்பு பிரபலங்களுக்கு மட்டும் இல்லாமல் மக்களுக்குமே பேர் அதிர்ச்சியாக இருந்தது. இவர்களுடைய இழப்பிலிருந்து நீங்காத நிலையில் தற்போது மீண்டும் ஒரு பிரபலம் இறந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

Advertisement

தமிழ் சினிமா உலகில் 40 ஆண்டு காலமாக பயணம் செய்திருந்தவர் மதுரை மோகன்.
இவர் மதுரையை சேர்ந்தவர். இவருக்கு அடையாளமே அவருடைய கம்பீரமான பெரிய மீசை தான். இந்த மீசையினால் தான் இவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது என்றே சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் மதுரை மோகனுடைய மீசை ரொம்பவே பிடிக்கும் என்று சிம்பு கூட ஒரு முறை பேட்டியில் சொல்லி இருந்தார்.

இவர் பிரபலமான நடிகர்களின் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். இவர் கமலஹாசனின் நடிப்பில் வெளிவந்த அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் கூட ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்திருந்த முண்டாசுப்பட்டி படத்தில் இவருடைய கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருந்தது.

Advertisement

அதற்குப் பிறகும் இவர் பல படங்களில் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இவர் சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் கடந்த சில நாட்களாகவே இவர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்திருந்தார். பின் இன்று காலை இவர் உயிரிழந்தார். இவருடைய இழப்பு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. மேலும் ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களுடைய இரங்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

இந்த நிலையில் பிரபல நடிகர் காளி வெங்கட் தன்னுடைய சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ஐயா நடிகர் மதுரை மோகன் அவர்கள் இன்று காலை உடல்நலக்குறைவால் காலமானார் ஆழ்ந்த இரங்கலும் வருத்தமும். ஏறத்தாழ 40 ஆண்டுகாலமாக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்படாத நடிகராக வலம் வந்தவரை “முண்டாசுப்பட்டி” படத்தின்மூலம் வாய்ப்பளித்த இயக்குனர் ராம்குமார் அவர்களுக்கும்” என தெரிவித்துள்ளார்.

Advertisement