போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட தன்னுடைய மகனுக்கு நடிகர் மன்சூர் அலிகான் கூறி இருக்கும் அட்வைஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது சோசியல் மீடியா முழுவதும் ஹாட் டாபிக்கே மன்சூர் அலிகான் மகன் குறித்த செய்தி தான். சமீப காலமாகவே போதைப்பொருளை ஒழிப்பதில் இந்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, தமிழக அரசு போதைப் பொருள் கடத்தலை தடுக்க தீவிரம் காட்டி வருகிறது.
இதனால் ஆங்காங்கே போதை பொருள் கடத்தல் கும்பலையும் கைது செய்து இருக்கிறது. சமீபத்தில் கூட தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் ஒருவர் இந்த போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டது அனைவரும் அறிந்ததே. இப்படி இருக்கும் நிலையில் மன்சூர் அலிகான் மகனும் போதைப் பொருள் வழக்கில் கைதாகி இருக்கும் சம்பவம் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
மன்சூர் அலிகான் மகன் கைது:
சமீபத்தில் சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் செயலி மூலம் போதைப் பொருள்கள் விற்பனை செய்து இருக்கிறார்கள். இதை எறிந்த போலீஸ் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். இதனால் கடந்த மாதமே சில கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டு இருந்தார்கள். இந்த வழக்கில் மன்சூர் அலிகான் மகன் அலிகான் துலக் சிக்கியிருக்கிறார்.
மன்சூர் அலிகான் சொன்ன அட்வைஸ்:
தற்போது இவருக்கு 26 வயது தான். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து துலக்கை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். இதை அடுத்து ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்துக்கு அவரை அழைத்து சென்று விசாரணையும் நடத்தி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் சிறைக்கு வேனில் தன்னுடைய மகனை போலீஸ் அழைத்து செல்லும்போது மன்சூர் அலிகான், ஏன் தப்பு பண்ற, தைரியமாய் இரு, சாப்டியா என்று அறிவுரை சொல்லி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மன்சூர் அலிகான் குறித்த தகவல்:
தமிழ் சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான வில்லனாக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லனாக மட்டும் இல்லாமல் சமீப காலமாகவே காமெடி கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார். இவர் சினிமா உலகில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினி, விஜயகாந்த், கமல், விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார்.
மன்சூர் அலிகான் திரைப்பயணம்:
அதன் பிறகு சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார். அந்த வகையில் இவர் சட்டமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தேர்தலில் தோற்றது அனைவருக்கும் தெரிந்ததே. பின் இவர் சினிமாவில் மீண்டும் என்ட்ரி கொடுத்து இருக்கிறார். அந்த வகையில் விஜய் நடித்த லியோ படத்தில் மன்சூர் அலிகான் நடித்து இருந்தார். இதை அடுத்து இவர் சில படங்களில் ஹீரோவாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.