ஹீரோவாகும் மன்சூர் அலிகான். அதிரடியாக உடலை குறைத்துள்ளாராம்.

0
1411
Mansoor-Alikhan

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர் மன்சூர் அலிகான். இவர் 90 கால கட்டங்களில் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து பட்டையை கிளப்பி இருப்பார். இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், துணை கதாபாத்திரத்தில் தான் நடித்து உள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழி படங்களில் நடித்து உள்ளார். இவர் திரைப்பட நடிகர் என்பதை தாண்டி ஒரு அரசியல்வாதியும் ஆவார். நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் தமிழ் முதலில் சண்டை பயிற்சியாளராக தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

பின் இவருடைய உருவத்தையும், நடிப்பு பாவத்தையும் பார்த்து படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதற்கு பிறகு இவர் பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானர். சமீப காலமாகவே நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் படங்களில் பிஸியான காமெடியனாக நடித்து வருகிறார். மேலும், இவர் சமூக பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்தும் வருகிறார். கடந்த ஆண்டு ஜோதிகா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ஜாக்பாட். இந்த படத்தில் நடிகர் மன்சூர் அலிகான் காமெடியனாக நடித்து அசத்தி இருந்தார்.

- Advertisement -

அதே போல் இந்த ஆண்டுக்கான பல படங்களில் நடிப்பதற்காக ஒப்பந்தம் செய்து உள்ளார். மேலும், சில படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான கைதி படத்தில் ஹீரோவாக நடிக்க முதலில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் மன்சூர் அலிகானை தான் யோசித்து வைத்திருந்தாராம். அதை ஒரு பேட்டியில் லோகேஷ் கனகராஜ் அவர்களே கூறியிருந்தார். அதற்குப் பிறகு தான் நடிகர் கார்த்திக்கை வைத்து படம் எடுத்தாராம்.

இந்நிலையில் நடிகர் மன்சூர் அலிகான் அவர்கள் பெரிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புது படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க இருப்பதால் 120 கிலோ எடையிலிருந்து 90 கிலோ எடைக்கு மன்சூர் அலிகான் உடல் எடையை குறைத்து உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவர் உடல் எடையை குறைக்க இன்னும் பல முயற்சி செய்து வருகிறார். அதோடு இவர் நடிக்கும் படம் குறித்து வேறு எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், வில்லன், காமெடியன் கதாபாத்திரத்தில் அசத்திய மன்சூர் அலிகான் தற்போது ஹீரோ கதாபாத்திரத்தில் எப்படி இருப்பார் என்று பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

-விளம்பரம்-
Advertisement