சீல் வைக்கப்பட்ட நடிகர் மன்சூர் அலிகானின் சென்னை வீடு – என்ன காரணம் பாருங்க ?

0
9916
- Advertisement -

நடிகர் மன்சூர் அலிகான் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ள சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் மன்சூர் அலிகான். இவர் வில்லன், காமெடி என பல கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.இவர் ரஜினி, விஜயகாந்த், கமல்,விஜய் போன்று பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து இருக்கிறார். பின் இவர் சினிமாவில் இருந்து அரசியலில் குதித்தார்.

-விளம்பரம்-
மன்சூர் அலிகான் வீடு

மேலும், கடந்த மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மன்சூர் அலிகான் சுயேச்சையாக போட்டியிட்டு படுதோல்வி அடைந்தது அனைவருக்கும் தெரிந்ததே. இந்நிலையில் மன்சூர் அலிகான் வீட்டிற்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து உள்ளனர். சென்னை சூளைமேடு பெரியார் பாதையில் மேற்கே உள்ள பகுதியில் நடிகர் மன்சூர் அலிகானுக்கு வீடு உள்ளது. இந்த வீடு அரசு புறம்போக்கு நிலம் 2400 சதுர அடியை ஆக்கிரமித்து கட்டி இருப்பதாகவும், இங்கு பல ஆண்டுகளாக இவர்கள் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் பாருங்க : ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ – கோபியை மீம் போட்டு வச்சி செய்யும் நெட்டிசன்கள்.

- Advertisement -

இந்த நிலையில் மன்சூர் அலிகான் வீட்டை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து நோட்டிஸ்ஸை அவரது வீட்டில் ஒட்டி உள்ளார்கள். இது குறித்து மன்சூர் அலிகான் அவர்கள் கூறியது, பல ஆண்டுகளுக்கு முன்னே ஒரு கிரவுண்ட்(2400 சதுர அடி) நிலத்தை அப்பாவு, அவரது மகன் பாரி ஆகியோர் என்னிடம் விற்று விற்றார்கள். அதற்குப் பிறகு தான் இது புறம்போக்கு நிலம் என்று எனக்கு தெரிய வந்ததாகவும் மன்சூர் அலிகான் கூறியிருக்கிறார்.

மேலும், இது தொடர்பாக மன்சூர் அலிகான் அவர்கள் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த இடத்தை விற்ற நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகார் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு 2019ஆம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த நிலையில் புறம்போக்கு நிலத்தை மீட்கும்படி மாநகராட்சி அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நடிகர் மன்சூர் அலிகான் வீட்டை தற்போது மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்துள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement