சினிமால நடிக்கும் போதே மூட்டை தூக்குற வேலைக்கு போனேன், அதுக்கு காரணம் – ராமதாஸ் முனிஷ்காந்த்தாக மாறிய கதை.

0
803
munish
- Advertisement -

சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்காக நான் செய்யாத வேலைகளே இல்லை என்று தன் சினிமா பயணத்தை பற்றி முனீஷ்காந்த் அளித்துள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நகைச்சுவை நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் முனீஸ்காந்த். ஆரம்பத்தில் இவர் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். பின் கலைஞர் தொலைக்காட்சியில் நடந்த நாளைய இயக்குனர் என்ற குறும்படத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார் அதற்கு பிறகு இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்புகள் வந்தது.

-விளம்பரம்-

இப்படி தொடர்ந்து சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர் சூது கவ்வும், பீட்சா, ஈஸ்வரன், பேச்சுலர் போன்ற படங்களின் மூலம் கவனிக்கப்பட்டார். அதன் பிறகு இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. தற்போது இவர் பல முன்னணி நட்சத்திரங்களின் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது,

- Advertisement -

முனீஷ்காந்த் அளித்த பேட்டி:

வத்தலகுண்டு பக்கம் நிலக்கோட்டை தான் என் சொந்த ஊர். நான் நடிக்க வருவதற்கு முன்பு கோயம்புத்தூர், மலேசியா என பல ஊர்களில் வேலை செய்து இருந்தேன். அதற்குப் பின் தான் 2002-ல் சினிமாவுக்குள் வந்தேன். இங்கு நான் பார்க்காத வேலைகளே இல்லை. கார் கழுவுவது, தியேட்டரில் வேலை செய்வது, பெருக்குவது, மூட்டை தூக்குவது என பல வேலைகள் செய்து இருந்தேன். ஏதாவது ஒரு படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என்ற காரணத்தினால் தான் இந்த மாதிரி எல்லா வேலைகளையும் செய்தேன்.

சினிமா வாய்ப்புக்காக முனீஷ்காந்த் செய்த வேலைகள்:

சினிமா வாய்ப்புக்காக ஆரம்பத்தில் பயங்கரமாக கஷ்டப்பட்டேன். நாலு நாள் நடிக்க போகணும்னா எல்லா வேலையும் செய்யனும். அதனாலேயே அவர்கள் கொடுக்கும் எந்த வேலை என்றாலும் முகம் சுளிக்காமல் செய்தேன். ஆரம்பத்தில் ஜூனியர் நடிகராக இருந்தேன். தாடி எல்லாம் வளர்த்து வில்லனாகவும் ட்ரை பண்ணி இருக்கிறேன். பின் நாளை இயக்குனரின் முண்டாசுப்பட்டி குறும்படத்தில் நடித்தேன். அதற்குப்பிறகுதான் என்னுடைய வாழ்க்கையே மாறியது. மேலும், நான் ஆரம்பத்தில் காமெடி நடிகராக மட்டுமில்லாமல் கிடைத்த எல்லா கதாபாத்திரங்களில் நடித்து வந்தேன்.

-விளம்பரம்-

முனீஷ்காந்த் திரை பயணம் அனுபவம்:

அதற்கு பிறகு சில படங்கள் என்னை மக்கள் மத்தியில் பிரபலமாக்கியது. அதுமட்டும் இல்லாமல் ஆரம்பத்தில் கிடைத்த ரோலில் பண்ணிட்டு இருந்தாலும் இப்போது கதையோடு இணைந்த காமெடிகள் மட்டும் நடித்து வருகிறேன். பேட்டை படத்தில் ரஜினி சாருடன் நடித்த அனுபவங்களை என்னால் மறக்கவே முடியாது. எவ்வளவு நேரமானாலும் சூட்டிங் ஸ்பாட்டிலேயே அவருக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே நின்று பொறுமையாக நடித்துக் கொடுப்பார். பெரிய நடிகர் என்ற கர்வம் இன்றளவும் அவரிடம் இல்லை. அவரிடம் நிறைய விஷயங்களை கற்று கொண்டேன். இப்போ பல படங்களில் நடித்து வருகிறேன்.

முனீஷ்காந்த் நடிக்கும் படங்கள்:

இது எனக்கு பெருமையாக இருக்கிறது. பல வேலைகளை செய்து கஷ்டப்பட்ட உழைப்பு வீணாகவில்லை என்று தான் சொல்லணும் என்று கூறி இருந்தார். தற்போது முனீஷ்காந்த் அவர்கள் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு மொழியிலும் நடித்து வருகிறார். தற்போது இவர் சர்தார், ஹாஸ்டல், ஆலம்பனா, மிடில் கிளாஸ் போன்ற பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

Advertisement