தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை என்ற ஒன்றை தோற்றுவித்தவர் நாகேஷ். இவருடைய நகைச்சுவைக்கும், குணச்சித்திர நடிப்புக்கும் ஈடு இணை யாருமில்லை. தன்னுடைய நகைச்சுவை மூலம் பல சாதனைகள் படைத்து உள்ளார். இவர் 1000 திரைப்படங்களுக்கு மேல் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். இன்றும் இவருடைய நகைச்சுவை மக்கள் மத்தியில் பேசப்பட்டு தான் இருக்கிறது. மேலும், நகைச்சுவைக்கு என்று ஒரு சிலை வைத்து கொண்டாடப்பட்டவர். இவருடைய மகன் தான் பிரபலமான நடிகர் ஆனந்த் பாபு. இவர் 1983-ம் ஆண்டு சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.
அதனைத் தொடர்ந்து இவர் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், கதாநாயகனாகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். சினிமாவின் உச்சத்தில் இருக்கும் ஆனந்த் பாபுவுக்கு குடிப்பழக்கம் இருந்தது. பின் கால மாற்றங்களால் தன்னுடைய குடிப்பழக்கத்தினால் சினிமாவை விட்டு விலகியிருந்தார். தற்போது இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் மௌன ராகம் என்ற சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
பிறகு இவர் சினிமாவிலும் நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்நிலையில் நடிகர் ஆனந்த்பாபுவின் குடும்ப புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. நடிகர் ஆனந்த் பாபுவுக்கு மொத்தம் நான்கு குழந்தைகள் உள்ளன. அதில் மூன்று ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை. ஆனந்த்பாபுவின் இரண்டு மகன்களின் பெயர்கள் பிஜேஷ்,கஜேஷ். தற்போது இவர்கள் இருவரும் நடிகர்களாக உள்ளனர்.
பிஜேஷ் அவர்கள் தற்போது சந்தானம் நடிப்பில் வெளிவர இருக்கும் சர்வர் சுந்தரம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த சர்வர் சுந்தரம் படம் தன்னுடைய தாத்தா நடித்த படம் என்பது குறிப்பிடத்தக்கது. கஜேஷ் கல்கண்டு என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் 2014 இல் வெளிவந்தது. தன் தாத்தா, தந்தையைப் போலவே ஆனந்த்பாபுவின் மகன்களும் சினிமா துறையில் களம் இறங்கியுள்ளனர்.