தமிழ் சினிமாவில் திறமை இருந்து லக் என்ற விஷயம் அமையாமல் இருக்கும் பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை தேவையாணி சகோதரரான நகுலும் ஒருவர். நடிகர் நகுல் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நடிகர் நகுல் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆகி 4 ஆண்டுகள் ஆகி குழந்தை இல்லாமல் இருந்து வந்த நகுல் கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி நடிகர் நகுல் பெண் குழந்தைக்கு அப்பாவானார். இந்த நிலையில் தனது மகளுக்கு அகீரா என்று பெயர் வைத்திருக்கிறார் நகுல். அதாவது தன்னுடைய பெயர், தன்னுடைய மனைவியுடைய பெயரை போன்று தனது மகளுக்கும் மூன்றெழுத்தில் பெயர் வைத்துள்ளார் நகுல்.
மேலும், தனது மகளின் பெயருக்கு பின்னால் தனது மனைவியின் பெயரை இணைத்து அகிரா ஸ்ருதி என்று பெயர் வைத்து உள்ளார் நகுல். பொதுவாக அப்பாவின் பெயரை தான் பிள்ளைகளின் பெயருக்கு பின்னால் சேர்ப்பார்கள். ஆனால், அம்மாவின் பெயரை பிள்ளையின் பெயருக்கு பின்னால் நகுல் சேர்த்ததற்கு காரணம் அவர் தனது மனைவி தியாக குணத்தின் மீது வைத்துள்ள மரியாதை தான்.
சமீபத்தில் நகுல் மகள் பிறந்து ஒரு மாதம் நிறைவடைந்த நிலையில் நடிகர் நகுலின் மனைவி தனது பிரசவத்தின் போது எடுத்த சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். அதில் தனது மகளை தண்ணீர் தொட்டியில் பிரசவம் பார்த்து ஈன்றெடுத்து உள்ளதாக கூறியுள்ளார் ஸ்ருதி. மேலும், தனது மகள் பிறப்பதை நடிகர் நகுலும் உடன் இருந்து பார்த்து இருக்கிறார். இப்படி ஒரு அழகிய தருணத்தில் பிறந்தவர் தான் நகுல் மகள் அகீரா.