புருவத்தில் வெட்டு, புடைக்கும் நரம்புகள்.! உடலை பயங்கரமாக ஏற்றியுள்ள நகுல்.!

0
833
Nakul
- Advertisement -

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான படம் “பாய்ஸ்”. முற்றிலும் புது முகங்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில் மூலம் 4 நண்பர்களில் ஒருவராக நடித்தவர் நடிகர் நகுல். இன்று ஒரு பெயர் சொல்லும் அளவிற்கு தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-
Related image

நடிகர் நகுல், பிரபல நடிகை தேவையானியன் சகோதரர் என்று நம் அனைவர்க்கும் தெரியும்.பாய்ஸ் படத்தில் மிகவும் குண்டாக இருந்த நகுல் பின்னர் தனது உடலை முற்றிலும் குறைத்து 2008 ஆம் தமிழில் வெளியான “காதலில் விழுந்தேன் ” என்ற படத்தில் தோன்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.

இதையும் படியுங்க : முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி.! காரணம் கேட்டா ஷாக் ஆவீங்க.! 

- Advertisement -

இவர் நடித்த வல்லினம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. ஆனால், அதன்பின்னர் நடித்த ஒரு சில படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை. இறுதியாக ‘செய்’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் அதுவும் கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றிருந்தது.

படங்களில் வாய்ப்பு குறையவே தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வந்தார். தற்போது காதலில் விழுந்தேன் படத்தை இயக்கிய கண்ணன் இயக்கத்தில் ‘எரியும் கண்ணாடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது நகுல் தனது உடலை பயங்கரமாக ஏற்றியுள்ளார் அந்தப் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

-விளம்பரம்-
Advertisement