முன்னணி நடிகரின் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி.! காரணம் கேட்டா ஷாக் ஆவீங்க.!

0
723
Sai-pallavi
- Advertisement -

மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தின் மூலம் தனது இயல்பான நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் மலையாள நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்திற்கு பின்னர் மம்மூடி மகன் துல்கர் நடித்த களி என்ற படத்தில் நடித்தார், அந்த படமும் வசூல் சாதனை புரிந்தது.

-விளம்பரம்-

இந்த இருப்படங்களின் வெற்றியை தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார். மலையாளத்தை தொடர்ந்து சாய் பல்லவி தெலுங்கு சினிமாவில் கால்பதிக்க ஆர்மபித்தார். 2017 இல் அவர் நடித்த பிடா படம் மாபெரும் வெற்றியடைந்தது, இதனால் அவருக்கு அங்கும் மார்க்கெட் கூடிவிட்டது.

- Advertisement -

அந்த படத்திற்கு பின்னர் தெலுங்கிலும் சாய் பல்லவியின் மார்க்கெட் எங்கேயோ போய் விட்டது. தெலுங்கில் இன்னும் முன்னணி நடிகர்களுடன் நடிக்காத சாய் பல்லவிக்கு தெலுங்கில் இளம் சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபு நடிக்கவிருக்கும் அவரது 26 வது படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாம்.

Image result for mahesh babu

ஆனால், அந்தவாய்ப்பை மறுத்துவிட்டார் சாய் பல்லவி. அதற்கு என்ன காரணம் என்று கேட்ட போது மகேஷ் பாபுவின் ரசிகர்கள் தன்னை சமூக வலைதளங்களில் கலாய்த்தார்களாம். எனவே, அவருடன் நடித்தால் மேலும் கலாய்ப்பார்கள் என்று நடிக்க மறுத்துவிட்டதாக கூறியுள்ளார் சாய் பல்லவி.

-விளம்பரம்-
Advertisement