பிரசவ தழும்புகள் எங்கே ? உடல் கேலிக்கு தனது பிரசவ தழும்புகளை காண்பித்து நகுல் மனைவி செருப்படி பதில்.

0
104129
nakul
- Advertisement -

தமிழ் சினிமாவில் திறமை இருந்து லக் என்ற விஷயம் அமையாமல் இருக்கும் பல நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருக்கின்றனர். அந்த வகையில் பிரபல நடிகை தேவையாணி சகோதரரான நகுலும் ஒருவர். நடிகர் நகுல் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.நடிகர் நகுல் அவர்கள் கடந்த 2016 ஆம் ஆண்டு சுருதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.சமீபத்தில் தான் இந்த தம்பதியருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. மேலும், நகுல் மனைவி வாட்டர் பர்த் என்ற முறையில் தண்ணீர் தொட்டியில் தனது பிரசவத்தை நடத்தி இருந்தார்.

-விளம்பரம்-

இந்த பதிவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த நகுல் மனைவி சுருதி, sanctum, natural birth center என்ற இடத்தில் தான் குழந்தையை பெற்றெடுத்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே தனது பிரசவம் குறித்து குறிப்பிட்டிருந்த நகுல் மனைவி, தகுந்த மருத்துவ ஆலோசனைக்கு பின்னர் தேவையான மருத்துவ உதவியுடன் தான் குழந்தையை பெற்றெடுத்ததாக கூறி இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சுருதி ட்ரோல்களுக்கும், கேலிகளுக்கும் உடனடியாக பதிலடியை கொடுப்பவர்.

- Advertisement -

அந்த வகையில் சமீபத்தில் சமீபத்தில் இவர் பிரசவத்தால் ஏற்படும் தழும்புகள் குறித்து அடிக்கடி தன்னிடம் பலர் கேட்டதால் ஒரு பதிவு ஒன்றை போட்டு இருக்கிறார் அதில் நான் சமீபத்தில் புடவை கட்டிக்கொண்டு சில புகைப்படங்களை போட்டபோது பலரும் என்னிடம் எப்படி உங்களுக்கு குழந்தை பெற்றதற்கான தழும்புகள் இல்லை ? எப்படி நீங்கள் ஒல்லியாக மாறினீர்கள்? என்றெல்லாம் கேட்டு வருவார்கள். அவர்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். நானும் பிரசவத்தால் ஏற்பட்ட எடையை சுமப்பவள் தான். எனக்கும் பிரசவத்தால் தொப்பை இருக்கிறது. எனக்கும் தழும்புகள் இருக்கிறது.

ஒரு சில நேரங்களில் என்னுடைய பழைய ஆடைகளை போட நானும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். ஆனால், என்னை நானாக ஏற்றுக் கொள்ள எனக்கு சில வருடங்கள் தேவைப்பட்டது. நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் ஒரு பெண்ணாக இருப்பது மிகவும் கடினம் கர்ப்ப காலங்களில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நீங்கள் பலவற்றை எதிர்கொள்ள நேரிடும் அதனால் குழந்தை பெற்றவுடன் உடல் எடையை குறைப்பது பற்றியும் தழும்புகளை போக்குவது பற்றியெல்லாம் கவலைப் படாதீர்கள்.

-விளம்பரம்-
https://www.instagram.com/p/CI2qi2WDyoT/?utm_source=ig_embed

ஒரு சில நேரங்களில் என்னுடைய பழைய ஆடைகளை போட நானும் கஷ்டப்பட்டு இருக்கிறேன். ஆனால், என்னை நானாக ஏற்றுக் கொள்ள எனக்கு சில வருடங்கள் தேவைப்பட்டது. நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் ஒரு பெண்ணாக இருப்பது மிகவும் கடினம் கர்ப்ப காலங்களில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நீங்கள் பலவற்றை எதிர்கொள்ள நேரிடும் அதனால் குழந்தை பெற்றவுடன் உடல் எடையை குறைப்பது பற்றியும் தழும்புகளை போக்குவது பற்றியெல்லாம் கவலைப் படாதீர்கள்.

ஒரு அம்மாவாக இருப்பது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது? அதை மறந்துவிட்டு ஏன் தழும்புகளை பற்றி நினைக்க வேண்டும் ? போரில் ஏற்பட்ட காயத்தை அனைவரும் கொண்டாடுவார்கள் ? ஆனால் பிரசவத்தினால் ஏற்படும் தழும்பை பற்றி ஏன் கவலைப்பட வேண்டும் ? உங்களை உங்கள் கணவர் கூட அசிங்க படுத்த கூடாது. உங்களின் எடை,கழுத்து, நிறம், தொடை மார்பகம் என்று எந்த ஒரு விஷயம் குறித்தும் கவலை படாதீர்கள். இதை படிக்கும் கணவரும் அம்மாவும் மனைவியும் நண்பரும் வேறு யாரோ, இப்படி உடல் கேலியால் கவலைப்பட்டு இருந்தால் அதில் இருந்து மீள்வீர்கள் என்று நம்புகிறேன்.

Advertisement