தன் மகன் சொன்ன ஒரு வார்த்தை – இந்தியாவிலேயே இப்படி ஒரு வசதி உள்ள ஒரே மருத்துவமனையை கட்டிய நெப்போலியன்.

0
1338
nepolean
- Advertisement -

தன் மகனுக்காக நெப்போலியன் ஹாஸ்பிடல் இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துரைசாமி. திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் தான் நெப்போலியன் படித்தார். பின்னர் தனது 27 வயதில் உதயம் என்ற படத்தினை பார்த்து இவருக்கு நடிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டது. அதன் பின் போராடி 1991ல் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

- Advertisement -

நெப்போலியன் குறித்த தகவல்:

நெப்போலியன் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். தற்போது இவரது குடும்பம் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர். நெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இவருடைய மகனுக்காக தான் இவர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளனர். நடுவில் சிறிது காலம் நெப்போலியன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து கலக்கி கொண்டு வருகிறார்.

நெப்போலியன் அளித்த பேட்டி:

இந்நிலையில் சமீபத்தில் நெப்போலியன் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன் மகன் குறித்தும், சாஃப்ட்வேர் கம்பெனி குறித்தும் கூறியிருந்தது, தமிழகத்தில் என்னை போன்ற அரசியல்வாதி யாரும் சாப்ட்வேர் கம்பெனி வைக்கவில்லை. நான் 23 வருடமாக அந்த கம்பெனி நடத்தி வருகிறேன். எனக்கு சாப்ட்வேர் கம்பெனி பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது. இன்ஜினியரிங் படித்து முடித்து எல்லோரும் இந்த கம்பெனிக்கு வேலை தேடி அலைந்தார்கள். அதனால் உருவாக்கினேன். பின் என் மனைவியும் எம்பிஏ முடித்துவிட்டு என்னுடைய கம்பெனியை பார்த்துக் கொண்டு வருகிறார்.

-விளம்பரம்-

நெப்போலியன் சாஃப்ட்வேர் கம்பெனி:

அதேபோல் சினிமா, அரசியல், கம்பெனி என்று நான் பிஸியாக வேலை செய்து கொண்டிருந்ததால் என்னுடைய மகன் ஒருமுறை இப்பவும் நீங்கள் என்னுடன் இருக்க மாட்டீர்களா? எங்களை விட்டு மீண்டும் செல்வீர்களா? என்று கேட்டது எனக்கு மன வருத்தமாக இருந்தது. அதற்கு பிறகு என் குடும்பத்துடன் நான் இருக்க ஆரம்பித்தேன். என்னுடைய இரண்டாவது மகனுக்கு ஒரு வயதில் இருக்கும்போது உடல் பிரச்சினை குறித்து பல மருத்துவர்களை அணுகினோம். 10 வயதிற்கு மேல் அவரால் நடக்க முடியாது என்று சொன்னார்கள். அதே போல் அவனுக்கும் நடந்தது. இருந்தாலும், ஒரு நம்பிக்கையில் நாங்கள் பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தோம். அப்போது திருநெல்வேலி பக்கத்தில் நாட்டு வைத்தியம் நன்றாக செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அதற்கு பிறகு அங்கு நான் சென்றேன்.

மகனுக்காக நெப்போலியன் கட்டிய ஹாஸ்பிடல்:

நான் என் மகனுக்கு மருத்துவம் செய்வதை சோசியல் மீடியாவில் எல்லாம் வைரலாக்கி இருந்தார்கள். இதனைப் பார்த்து என் மகனைப் போல பல குழந்தைகளும் இந்த வியாதியால் அவதைப்பட்டு அங்கு வந்தார்கள். ஆனால், மருத்துவம் செய்யும் வசதியில்லை. நானே அந்த ஊரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி என் மகனுக்காக மருத்துவம் செய்திருந்தேன். பின் அந்த மருத்துவர் நீங்கள் ஹாஸ்பிடல் தாருங்கள் நான் செய்கிறேன் என்று சொன்னார். அதற்குப் பிறகு இரண்டே மாதத்தில் திருநெல்வேலியில் ஹாஸ்பிடல் கட்டி தந்தேன். அதற்குப் பிறகு நிறைய பேர் அங்கு சிகிச்சை பெற்

Advertisement