ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புதுநெல்லு புதுநாத்து என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய ‘சுல்தான்’ திரைடபடத்திலும் கார்த்தியின் தந்தையாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார் நெப்போலியன்.

வீடியோவில் 17 நிமிடத்தில் பார்க்கவும்

கடந்த ஆண்டு பேட்டி ஒன்றில் பங்கேற்ற நெப்போலியனிடம் விஜய் பற்றி கேட்கப்பட்டது. அப்போது பேசிய நெப்போலியன், போக்கிரி படத்தில் நான் பிரபுதேவாக்காக தான் நடித்தேன். அந்த கதாபாத்திரத்தில் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று பிரபுதேவா பிடிவாதம் பிடித்தார். அதனால் தான் நான் போக்கிரி படத்தில் நடித்தேன். அந்த படத்தில் விஜய் கூட எனக்கு சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நான் இப்போது வரை அவரிடம் பேசுவது இல்லை. மேலும், அவருடைய படங்களை நான் பார்ப்பதில்லை. அதனால் அவருடைய வளர்ச்சியை பற்றியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது.

Advertisement

தெலுங்கில் மகேஷ்பாபு பண்ண ரோல் தான் போக்கிரி படத்தில் விஜய் பண்ணார். அந்த படமும் நல்ல வெற்றி பெற்றது. கடின உழைப்பினால் தான் விஜய் முன்னுக்கு வந்து இருக்கிறார் என்று கூறினார்.அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நெப்போலியனிடம், விஜய்கும் அவருக்கும் இருந்த பிரச்சனை குறித்து கேட்கப்பட்டது.

அப்போது பேசிய நெப்போலியன், அந்தப் பேட்டியில் விஜய்க்கும் எனக்கும் அந்தப் படத்தின் போது ஏற்பட்ட சம்பவத்தை பற்றி மட்டும் தான் சொன்னேன் அதன்பின்னர் விஜய் நான் பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை. இடையில் தானு சார் கூட விஜய்யுடன் நடிக்க கேட்டார், நான் தான் ஒப்புக்கொள்ளவிலை. விஜய் அவர் படத்தில் நடிக்க ஆசைப்பட்டால் அவர் படத்தில் நடிக்க நான் தயார் தான். நான் நேசக்கரம் நீட்ட நான் ரெடி. நான் இறங்கிப்போக ரெடி, விஜய் என்னுடன் பேச வேண்டும் என்று சொன்னால் நான் உடனே பேசி விடுவேன்.

Advertisement
Advertisement