விஜயுடன் பேசரது இல்ல ஓகே, ஆனால், அஜித்துடனும் இப்படி நடிக்க மாட்டாராம் நெப்போலியன்.

0
2287
vijayajith

ஒரு காலத்தில் தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நடிகர் நெப்போலியன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1991 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த புதுநெல்லு புதுநாத்து என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதன் பின் இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடைசியாக இவர் தமிழில் சீமாராஜா என்ற படத்தில் தான் நடித்திருந்தார். இந்நிலையில் நடிகர் நெப்போலியன் அவர்கள் சமீபத்தில் வீடியோகால் மூலம் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் விஜய் குறித்து பேசியுள்ளார். தற்போது அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

- Advertisement -

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நெப்போலியனிடம் விஜய் உடன் நடித்த அனுபவம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நெப்போலியன் விஜயை பற்றி எனக்கு அவ்வளவாக தெரியாது. ஏனென்றால் நான் அவரது படங்களை பார்ப்பது கிடையாது எனக்கும் அவருக்கும் போக்கிரி படத்தின் போதுதான் ஒரு சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டது. அது உண்மைதான் இருப்பினும் அந்த சமயத்தில் விஜய் பிரபுதேவாவிற்கு இணையாக நடனம் ஆடி இருந்தார் என்று கூறியுள்ளார் நெப்போலியன்.

அதேபோல அஜித் குறித்து பேசிய நெப்போலியன் இதுவரை நான் நடிக்காத நடிகர்களில் அஜித்தும் ஒருவர். அவருடன் நான் நடிக்க ஆசை தான். ஆனால், கண்டிப்பாக வில்லனாக நடிக்க மாட்டேன். அவர் படத்தில் ஒரு நல்ல சப்போர்டிங் ரோலில் தான் நடிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் நெப்போலியன்.

-விளம்பரம்-
Advertisement