தென்னிந்திய சினிமா உலகில் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்ந்தவர் நெப்போலியன். இவருடைய உண்மையான பெயர் குமரேசன் துரைசாமி. திருச்சியில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லூரியில் தான் நெப்போலியன் படித்தார். பின்னர் தனது 27 வயதில் உதயம் என்ற படத்தினை பார்த்து இவருக்கு நடிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டது. அதன் பின் போராடி 1991ல் இவருக்கு சினிமா வாய்ப்பு கிடைத்தது.

இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த ‘புது நெல்லு புது நாத்து’ என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் இவருடைய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் பிற மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார்.

Advertisement

நெப்போலியன் குறித்த தகவல்:

நெப்போலியன் அவர்கள் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் அரசியல்வாதியும் ஆவார். தற்போது இவரது குடும்பம் அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தின் வசித்து வருகின்றனர். நெப்போலியன் அவர்களுக்கு ஜெயசுதா என்ற மனைவியும், தனுஷ், குணால் என இரண்டு மகன்களும் இருக்கிறார்கள். இவருடைய மகனுக்காக தான் இவர்கள் அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளனர். நடுவில் சிறிது காலம் நெப்போலியன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டார். தற்போது மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்து கலக்கி கொண்டு வருகிறார்.

பட்டம் பெற்ற இளைய மகன் :

நெப்போலியனுக்கு இரண்டு மகன்கள் இருக்கின்றனர். அதில் ஒரு மகனுக்கு சிறுவயதிலேயே உடல் நல பிரச்சனை ஏற்பட்டு நடக்க முடியாமல் போனது. அவரது சிகிச்சைக்காக தான் நெப்போலியன் வெளிநாட்டில் சென்று செட்டில் ஆனார். இப்படி ஒரு நிலையில் நெப்போலியனின் இளைய மகன் பட்டம் பெற்று இருக்கிறார். இந்த மகிழ்ச்சியான விஷயத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நெப்போலியன்.

Advertisement

ஏற்கனேவே தனது இளைய மகனின் பிரச்சனை குறித்து பேசிய நெப்போலியன் ‘ன்னுடைய இரண்டாவது மகனுக்கு ஒரு வயதில் இருக்கும்போது உடல் பிரச்சினை குறித்து பல மருத்துவர்களை அணுகினோம். 10 வயதிற்கு மேல் அவரால் நடக்க முடியாது என்று சொன்னார்கள். அதே போல் அவனுக்கும் நடந்தது. இருந்தாலும், ஒரு நம்பிக்கையில் நாங்கள் பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தோம். அப்போது திருநெல்வேலி பக்கத்தில் நாட்டு வைத்தியம் நன்றாக செய்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அதற்கு பிறகு அங்கு நான் சென்றேன்.

Advertisement

மகனுக்காக நெப்போலியன் கட்டிய ஹாஸ்பிடல்:

நான் என் மகனுக்கு மருத்துவம் செய்வதை சோசியல் மீடியாவில் எல்லாம் வைரலாக்கி இருந்தார்கள். இதனைப் பார்த்து என் மகனைப் போல பல குழந்தைகளும் இந்த வியாதியால் அவதைப்பட்டு அங்கு வந்தார்கள். ஆனால், மருத்துவம் செய்யும் வசதியில்லை. நானே அந்த ஊரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி என் மகனுக்காக மருத்துவம் செய்திருந்தேன். பின் அந்த மருத்துவர் நீங்கள் ஹாஸ்பிடல் தாருங்கள் நான் செய்கிறேன் என்று சொன்னார். அதற்குப் பிறகு இரண்டே மாதத்தில் திருநெல்வேலியில் ஹாஸ்பிடல் கட்டி தந்தேன். அதற்குப் பிறகு நிறைய பேர் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Advertisement