அசின் நடித்த முதல் படத்தில் நடித்துள்ள பார்த்திபன். இதோ அவர் நடித்த காட்சியின் அறிய வீடியோ.

0
3200
- Advertisement -

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் பார்த்திபன். ஆரம்பத்தில் சில படங்களில் மிகச் சிறிய வேடத்தில் நடித்த பார்த்திபன், ஹீரோவாக நடித்து இயக்கிய முதல் தமிழ் திரைப்படம் ‘புதிய பாதை’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று சூப்பர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து ‘பொண்டாட்டி தேவை, சுகமான சுமைகள், உள்ளே வெளியே, சரிகமபதநி, புள்ள குட்டிக்காரன், ஹவுஸ்ஃபுல், இவன், குடைக்குள் மழை, பச்சக் குதிர, வித்தகன், கதை திரைக்கதை வசனம் இயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, ஒத்த செருப்பு சைஸ் 7’ போன்ற பல படங்களை இயக்கி, நடித்தார் பார்த்திபன்.

-விளம்பரம்-

முதல் படம் ‘புதிய பாதை’ என்ற டைட்டிலில் துவங்கியதாலோ என்னவோ, பார்த்திபன் எல்லா படங்களிலும் ஒரு புதுமையை புகுத்தி தான் எடுத்திருப்பார். ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ என்ற படத்தில் கதையே இல்லை என்று கூறி தான் பார்த்திபன் அப்படத்தை புரொமோட் செய்தார். பார்த்திபன் தான் இயக்கிய படங்களில் நடித்ததை தவிர, மற்ற பிரபல இயக்குநர்கள் இயக்கிய பல படங்களிலும் நடித்திருக்கிறார்.

- Advertisement -

பார்த்திபன் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். மலையாளத்தில் 2001-ஆம் ஆண்டு வெளி வந்த திரைப்படம் ‘நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா’. இந்த படத்தினை இயக்குநர் சத்யன் அந்திகாட் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக குஞ்சக்கோ போபன் நடித்திருந்தார். இதில் பார்த்திபன் ஒரு சிறிய வேடத்தில் வலம் வருவார்.

இது தான் அவர் மலையாளத்தில் நடித்த முதல் படம். இந்த படத்தில் இன்னொரு சர்ப்ரைஸ் இருக்கிறது. இப்படம் பார்த்திபனுக்கு மட்டும் முதல் படம் இல்லையாம். பிரபல நடிகை அசின் அறிமுகமான முதல் படமும் இது தானாம். இப்படத்தில் பார்த்திபன் வரும் காட்சியின் புகைப்படம் இப்போது சமூக வலைத்தளமான ட்விட்டரில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

-விளம்பரம்-

படத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய காட்சியில் பார்த்திபன் “தமிழன், மலையாளி என்று பார்க்காமல் இந்தியன் என்று பார்” என அவரது பாணியில் வசனம் பேசியிருப்பாராம். அந்த காட்சி அப்படத்தில் பெரிதாக பேசப்பட்டதாம். ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ படத்துக்கு பிறகு ‘இரவின் நிழல்’ என்ற படத்தை இயக்கி, நடிக்கப்போகிறாராம் பார்த்திபன்.

Advertisement