சம்பளம் முதற்கொண்டு பேசிட்டோம்,ஆனால் – விஜய் படத்தை இயக்க மறுத்த காரணத்தை சொன்ன பார்த்திபன்.

0
2749
Parthiban Vijay

தமிழ் சினிமா உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர் நடிகர் பார்த்திபன். இவர் சினிமா உலகில் நடிகர், இயக்குனர் , தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். இவர் நடிப்பில், இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது. அந்த வகையில் கடந்த ஆண்டு இவருடைய வித்தியாசமான படைப்புகளில் ஒன்றான ஒத்த செருப்பு சைஸ் 7 படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஜய் நடித்த நண்பன் படத்தை முதலில் பார்த்திபன் அவர்கள் இயக்க இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

2012 ஆம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் நண்பன். இந்த திரைப்படத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 3 இடியட்ஸ் என்ற ஹிந்தி படத்தின் தழுவல். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றுத் தந்தது. இந்நிலையில் பார்த்திபன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் விஜய் நடித்த நண்பன் படத்தை முதன் முதலாக இயக்க இருந்ததாக அவரே கூறியுள்ளார்.

- Advertisement -

அதில் அவர் கூறியது, 3 இடியட்ஸ் படத்தை தமிழில் முதன் முதலாக என்னை பண்ண சொன்னதே விஜய் தான். ஜெமினி பிக்சர்ஸ்லில் இருந்து வந்து விஜய் சார் உங்களை தான் 3 இடியட்ஸ் படத்தை பண்ண சொன்னாங்க என்று சொன்னார். சம்பளம் உட்பட எல்லாமே பேசப்பட்டது. ஆனால், அப்போது நான் ஒரு ரீமேக் படம் எதற்காக டைரக்ட் பண்ணணும் என்றும், விஜய்யோட ஒரு படம் பண்ன வேண்டும் என்றால் அது புது கதையாக தான் இருக்கு வேண்டும் என்று நினைத்தேன்.

Nanban+Playlist 125 Videos

அவங்ககிட்ட நிறைய கேள்விகள் கேட்டேன். அதுக்கு அப்புறம் அது திசை மாறி என்னுடைய நண்பர் ஷங்கர் இயக்கினார். படம் வந்ததும் இவ்வளவு பெரிய ஹிட் கொடுக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. நாங்க ரெண்டு பேரும் இணைய போற படம் சிறப்பான படமாக, கமர்ஷியல் படமாக இருக்கும்னு நினைக்கிறேன். நிச்சயம் நான் அவரை வைத்து படம் பண்ணுவேன் என்று சொன்னார்.

-விளம்பரம்-
Advertisement