காதலர் தினத்தை முன்னிட்டு ‘காதல் ஒழிக’ என்று நடிகர் பார்த்திபன் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் பார்த்திபன். இவர் இயக்கி நடித்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் சினிமா துறையில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர்.
அதுமட்டுமில்லாமல் இவர் தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுப்பதில் கைதேர்ந்தவர். அந்த வகையில் சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்து இருந்த படம் ‘டீன்ஸ்’. டி. இமான் இந்த படத்திற்கு இசை அமைத்து இருந்தார். இந்த படத்தை பயாஸ்கோப் மற்றும் அகிரா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்தது. ஹாரர் த்ரில்லர் பாணியில் குழந்தைகளை மையமாக வைத்து இந்த படத்தை உருவாக்கி இருந்தார் இயக்குனர்.
டீன்ஸ் படம்:
இந்த படத்தில் யோகி பாபு, ஜான் போஸ்கோ, பிராங்கின்ஸ்டன், அஸ்மிதா, பி.கிருத்திகா ஐயர், கே.எஸ்.தீபன், சில்வென்ஸ்டன், உதய்பிரியன், பிரஷிதா, ரோஷன், அஸ்மிதா மகாதேவன்மோர், ரஞ்சித் பிரஷிதா, பார்த்திபன் ராதாகிருஷ்ணன், பிஞ்சி சீனிவாசன், பால சுவாமிநாதன், கால்டுவெல் வேல்நம்பிமோர் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மூடநம்பிக்கை, அறிவியல் ஆகியவற்றை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் கொடுத்திருந்தார்.
காதலர் தினம்:
இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை தான் பெற்று இருந்தது. இதை அடுத்து இவர் தன்னுடைய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு பார்த்திபன் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, இன்று பிப்ரவரி 14 உலக காதலர்கள் எல்லோருமே தங்களது காதலர் தினத்தை கொண்டாடி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் பல ஆண்டுகளுக்கு முன்பு இதே காதலர் தினத்தில் இளையராஜா இசையில், சீமான் இயக்கத்தில் காதல் ஒழிக என்ற படத்தில் நடிக்க இருந்தார்.
அந்த படம் எதிர்பாராத விதமாக கைவிடப்பட்டது. தற்போது அந்த படத்தினுடைய தலைப்பை நினைவு கூர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், ‘காதல் ஒழிக’ இன்றைய அரசியலில் தவிர்க்க இயலா கர்ஜனை நண்பர் சீமான் அவர்கள் இயக்க நான் நடிப்பதற்காக கால் நூற்றாண்டுக்கு முன் இதே நாளில் வைக்கப்பட்ட தலைப்பு.படம் கை விடபட்டாலும் நட்பு அப்படியே ஒருவரை ஒருவர் ரசித்தபடி தொடர்கிறது.
பார்த்திபன் பதிவு:
என் சில கவிதைகளை அவர் சிலாகித்து மேடையில் பாராட்டும் போது அந்தக் கவிதைகளில் உள்ள கருத்து விதைகளில் சில புதூ தளிர்கள் துளிர்க்கச் செய்கிறது. நானும் ஒரு ஒலி வாங்கிப் போல் அவர் பேச்சை மிக அருகில் இருந்து ரசிப்பேன் . இருவரின் அரசியலும் தத்துவமும் கருத்தும் விருப்பமும் வெவ்வேறாக இருப்பினும்,
‘கடவுள் இல்லை’ – பெரியார்
‘பெரியாரே இல்லை’ – சீமான்
அவரவரது குரலை உரக்க ஒலிக்கச் செய்வதாகவே நான் பார்க்கிறேன். நானும் அப்படியே எனக்கு சரியெனப் பட்டதை பட்டவர்த்தனமாக பேசுகிறேன். (அரசியல் +இன்ன பிற லாப நோக்கின்றி)
புரிந்தோர் பிஸ்தாக்கள்
புரியாதோர் பிஸ்கோத்துகள்!
சரி காதலுக்கு வருவோம் !
வருவதும் போவதும் வாடிக்கையே காதலுக்கு.
வருவதெல்லாம் போவதும் வாடிக்கையே சாதலுக்கு!
என்றோ மிடித்துப்போனது இன்று பிடிக்காமல் போய் சீமான் சுவரில் பெரியார் புகைப்படம் போல தான் இந்தப் பாழாய் போன காதலும் .
‘ என் இதயத்தில் அவள் அடித்து விட்டுச் சென்ற ஆணியில் கூட அவள் புகைப்படத்தைதான் மாட்டி விட்டிருக்கிறேன்’ என என் நண்பர் ஒருவர் எழுதியதைப் போல
போன வருடம்
போன காதல்
வேறு பூமியில்
வேர் பிடித்துப் பூத்துக் குலுங்கும் .-அது
புரியாத-இன்னும்
பிரியாத -உயிர்வரை
பிரிந்திடாத ஒரு
காதலை
‘காதல் ஒழிக’ என
இக் காதலர் தினத்தில்
கொண்டாடும்!- புதிதாய்
பூத்தவர்கள்
பூத்தரேக்குலு சுவைத்து
கொண்டாட்டும்,
தோத்தவர்கள்
காத்திருங்கள்
அவளை/அவனை
சுமந்து கர்ப்பமான இதயத்தில்
கன்றாவி கவிதையாவது பிறக்கலாம்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா காதல் உய்க்கும் – பின்
பொய்க்கும் என்று கூறி இருக்கிறார்.