கொரோனாவால் மது இல்லாமல் அவதிப்படும் குடிமகன்கள். பார்த்திபன் சொன்ன செம ஐடியா.

0
27333
parthiban
- Advertisement -

உலகம் முழுவதும் பலியானவர்களின் எண்ணிக்கை 53000 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 லட்சத்தை தாண்டி உள்ளது. இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை 2301 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டும், 56 பேர் பலியாகியும் உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு செல்வதால் பிரதமர் மோடி அவர்கள் இந்தியா முழுவதும் 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

-விளம்பரம்-

கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவால் மக்கள் யாரும் வெளியில் வரக்கூடாது என்பதால் வீட்டுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். இந்த சூழலில் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும், திரைப்பிரபலங்கள்,சமூக ஆர்வலர்கள் பலரும் சமூக வலைத்தளங்கள் மூலம் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு குறித்து வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

அந்த வகையில் நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் தனது ஸ்டைலில் கொரோனா குறித்து அறிவுரை கூறியுள்ளார். அவர் வீடியோவில் கூறியதாவது, இந்த 21 நாட்களில் வீட்டில் இருப்பதால் ஒரு நல்ல விஷயத்தை செய்ய முயற்சி செய்யுங்கள். அப்படி செய்தால் நம் வாழ்கை இயல்பாகவே மாறிவிடும். அதே போல் ஒரு கெட்ட விஷயத்தை விட்டுவிட்டால் அது நம் வாழ்வில் இருந்தே போய்விடும்.

உதாரணத்துக்கு, இந்த குடிப்பழக்கத்தை 21 நாட்களில் கைவிட்டுவிட்டால் நல்லது. அதன்பின் இந்த பழக்கம் இல்லாமல் போய்விடும். போதை குறைவாக வேண்டும் என்றால் மது அருந்தலாம், அதுவே போதை நிறைய வேண்டும் என்றால் தியானம் தான் செய்ய வேண்டும். நம் உள்மனம் நோக்கிய ஒரு பயணம் தான் தியானம். தினமும் மிஷின் போல் உழைக்கும் நமது உடலுக்கு தினமும் மூச்சு பயிற்சி செய்ய வேண்டும்.

-விளம்பரம்-

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளும் பயிற்சிகளை இந்த 21 நாட்களில் முயற்சி செய்து கற்று கொள்ளுங்கள். பிறகு அது நம் வாழ்வில் இயல்பாகவே மாறிவிடும். அதே போல் நல்ல எண்ணங்களை பரப்புவதும் மிக முக்கியம் செயல். அரசாங்கம் சொல்லும் அறிவுரைகளை கேட்டு நடங்கள். அது நம் வாழ்விற்கு அவசியமான ஒன்று.

நாம் அனைவரும் அரசாங்கத்திற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். விரைவில் நம் இந்தியாவை இந்த நோயில் இருந்து காப்பாற்றலாம். அது மட்டுமல்லாமல் எந்த போர் வந்தாலும் அதில் வென்று மிளிர்வது, ஒளிர்வது நிச்சயம் என்று பார்த்திபன் தெரிவித்து உள்ளார். இப்படி இவர் கருத்து தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

மேலும், நடிகர் பார்த்திபன் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார். தமிழ் சினிமா உலகில் பன்முகங்களை கொண்ட நபர்களில் பார்த்திபனும் ஒருவர். இவர் திரை உலகில் வித்தியாசமான முறையில் படங்களை கொடுப்பதில் கைதேர்ந்தவர். இவர் சினிமா உலகில் நடிகர், இயக்குனர் , தயாரிப்பாளர், கதையாசிரியர், எழுத்தாளர் என பல திறமைகளை கொண்டவர். இவர் நடிப்பிலும், இயக்கத்திலும் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து உள்ளது.

Advertisement