தமிழ் சினிமாவில் எத்தனையோ குணச்சித்திர நடிகர்கள் இருந்தாலும் ஒரு சிலர் மட்டுமே ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துவிடுகின்றனர். அந்த லிஸ்டில் பசுபதிக்கு ஒரு தனி இடம் உண்டு. நாடக கலைஞராக தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி தற்போது சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் பசுபதி. ஆரம்பத்தில் இவர் கூத்துப்பட்டறையில் சேர்ந்து தன் திறமையை காண்பித்தார்.பின் இவர் நடிப்பின் மீது வைத்து இருந்த ஆர்வத்தை பார்த்து பிரபலமான நடிகர்கள் படத்தில் நடிக்க வாய்ப்பு தந்தனர்.

கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டு தற்போது சினிமா உலகில் முன்னணி நடிகராக இருக்கிறார். இவர் தமிழ்மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இவர் முதன் முதலில் அறிமுகமான படம் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான ஹூவுஸ்புல் திரைப்படம் தான். ஆனால், இவரை அறிமுகம் செய்து வைத்த பெருமை நாசருக்கு தான் சேரும்.

Advertisement

கூத்துப்பட்டறையில் இருந்த போதே பசுபதிக்கு நாசரின் நட்பு கிடைத்து இருக்குறது. அந்த சமயத்தில் தான் கமல் அவர்கள் மருதநாயகம் படத்தை எடுத்துக்கொண்டு இருந்தார். அப்போது நாசரின் சிபாரிசின் பெயரில் பசுபதிக்கு மருதநாயகம் படத்தில் நடிக்க வாய்பு கிடைத்தது. முதன் முறையாக கேமரா முன்பு முகம் காண்பிக்கப் போகிறோம் என்ற பெரும் ஆசையில் இருந்தார் பசுபதி.

ஆனால், துரதிர்ஷ்ட வசமாக மருதநாயகம் திரைப்படம் கைவிடப்பட்டது. இதனை தொடர்ந்து பசுபதியை தான் இயக்கிய மாயன் படத்தில் நடிக்க வைத்தார் நாசர். இதனை தொடர்ந்து கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பசுபதிக்கு தூள் படத்தின் மூலம் வில்லன் ரோல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பல படங்களில் வில்லனாக கமிட் ஆனார் பசுபதி.

Advertisement

அதிலும் குறிப்பாக சுள்ளான் படத்தில் இவர் பேசிய சென்னை ஸ்லாங் வசனங்கள் படு பேமஸ் ஆனது. குறிப்பாக இந்த படத்தில் அவர் பேசிய தம்மா தூண்டு டாமா கோலி அவன் என்ற வசனம் எல்லாம் இவர் பேசிய பின்னரே பேமஸ் ஆனது என்றே சொல்லலாம். தொடர்ந்து பல படங்களில் வில்லனாக நடித்த பசுபதி பின்னர் காமெடி கதாபாத்திரங்களையும் ஏற்று நடித்தார். அதனை தொடர்ந்தே ஒரு சிறந்த குணச்சித்திர நடிகராக உருவெடுத்தார்.

Advertisement

பசுபதியின் இந்த அபார வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக அவரின் பழைய வீடியோ ஒன்றை சொல்லலம். 10,15 வருஷமாக சினிமா துறையில் இருக்கிறவங்க எல்லாருமே கமர்சியல் நடிகர்கள் வாங்கும் சம்பளத்தை வாங்குவதில்லை. அவர்களுடைய எதிர்காலம் என்ன ஆகும் என்று கூட தெரியவில்லை. இதே போல் நிறைய பேர் இருக்கிறார்கள். எனக்கு ஆரம்பத்தில் பயம் இருந்தது. என்னைப் போல் பலரும் பயந்தார்கள்.

சினிமா துறையில் நுழையும் போது பிற்காலத்தில் எப்படி இருப்போம், ரிக்ஷா ஓட்டுவானா? டீ போடுவானா? என்று யாருக்குமே தெரியாது. ஆனால், எனக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது. என்னால் சினிமா துறையில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது என்று பேசி இருப்பார். அவர் சொன்னதை போலவே இன்று அவர் சினிமாவில் ஒரு சிறந்த நடிகராக திகழ்ந்து வருகிறார். இப்படியொரு நம்பிக்கை கொண்ட மனிதருக்கு இன்று பிறந்தநாள்.

Advertisement