நீங்க சொன்னது கரக்ட் தான்னு விஜயே சொன்னாரு. பவன் கொடுத்த அடுத்த ஷாக். வைரலாகும் வீடியோ.

0
31823
pawan
- Advertisement -

தமிழ் சினிமாவில் தளபதி என்ற அந்தஸ்துடன் முன்னணி நடிகர்களின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். இவரது ஒரு சில படங்கள் தழுவினாலும் பல்வேறு படங்கள் வசூல் ரீதியாக பல்வேறு சாதனைகளை செய்திருந்தது. சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பிகில் திரைப்படமும் வசூல் ரீதியாக 300 கோடிக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்த நிலையில் விஜய் நடிப்பில் வெளியாகி இருந்த குருவி படம் குறித்து அசுரன் படத்தின் 100வது நாள் வெற்றி விழாவில் பிரபல நடிகர் பவன் கேலி செய்து பேசியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

-விளம்பரம்-
Image result for பவன் விஜய்

- Advertisement -

ஆடுகளம், வடசென்னை ஆகிய படங்களுக்கு அடுத்து தனுஷ்– வெற்றிமாறன் இணைந்து உருவாக்கிய படம் தான் “அசுரன்”. சமீபத்தில் தான் தனுஷ் நடிப்பில் வெளியான ‘அசுரன் ‘ திரைப்படம் அமோக வெற்றி பெற்றது. இந்த படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து உள்ளது. அதுமட்டுமில்லாமல் தனுஷ் நடிப்பில் வெளி வந்த படத்திலேயே இந்தப் படம் தான் அதிக வசூல் செய்தது. இந்நிலையில் இந்த படத்தின் 100-வது நாள் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழா சென்னை ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது.

ந்த விழாவில் பேசிய பவன், பேசியது, அசுரன் படத்தில் நான் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது. பொதுவாகவே திரைப் படங்கள் நூறு நாட்கள் தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக ஓடுவது என்பது அரிதான ஒன்று. கடைசியாக நான் நடித்த குருவி திரைப்படம் 150 நாட்கள் ஓடியது என்று வெற்றி விழாவிற்கு நான் சென்றிருந்தேன். ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியவில்லை என்று கூறினார். இவருடைய பேச்சை கேட்டு அரங்கமே சிரிப்பொலியில் சிரிக்க ஆரம்பித்தது.

-விளம்பரம்-

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவ நடிகர் பவனுக்கு பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்றுள்ள நடிகர் பவன் குருவி படம் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், அந்த வீடியோவில் பேசியுள்ள பவன், இந்த விஷயத்தை நான் மேடையில் சொன்னேன் என்றால் தான் பலருக்கும் தெரியும். ஆனால், இதே விஷயத்தை நேரில் நான் அவரிடம் கூறியிருக்கிறேன். அவருடைய இரண்டு மூன்று படங்கள் பெரிய ஹிட் ஆகி இருந்தது அப்போது நான் என்ன படம் இது எனக்கு பிடிக்கவே இல்லை. அந்த படத்தில் இருந்து பாதியிலேயே எழுந்து வந்துவிட்டேன் என்று கூறினேன். மேலும், உங்கள் ஒரு சில படம் எனக்கு மிகவும் பிடித்த படம். ஆனால், அது சரியாக ஓடவில்லை என்று அவரிடம் சொன்னபோது ஆமா நீங்க சொல்றது கரெக்ட் தான்னு சொன்னாரு என்று கூறியுள்ளார்.

Advertisement