விபச்சாரம் இருக்கே..! சினிமா போதை.! இவ்ளோ கேவலமா நடந்துக்கலாமா..! கருணாஸ் கோபம்

0
958
karunas-Actor
- Advertisement -

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி ‘தமிழ் லீக்ஸ்’ என்ற பெயரில் தமிழ் திரையுலக பிரபலங்களை பற்றிய சர்ச்சையான விடயங்ககளை முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.இவர் கூறும் குற்றச்சட்டுகளுக்கு நடிகர் டி ஆர், நடிகை கஸ்தூரி ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் சமீபத்தில் காமெடி நடிகரும், தமிழ் திரைப்பட சங்க துணை தலைவருமான கருணாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார்.

-விளம்பரம்-
Sri Reddy
Sri Reddy

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் கருணாஸிடம், ஸ்ரீரெட்டி தமிழ் நடிகர்கள் மீது வைத்துவரும் குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் கருணாஸ்’ பொதுவாக சினிமா என்றாலே அதில் இருக்கும் நடிகர், நடிகைகள் ஒழுக்கமற்றவர்கள் தான் என்று மக்கள் ஒரு மனநிலையில் இருந்து வருகின்றனர். என்று கூறியுள்ளார். அதே போல ஸ்ரீரெட்டி குறித்து நடிகர் கருணாஸ் பேசுகையில், அந்த பெண் பட வாய்ப்புகளை தருவதாக கூறி தன்னை பயன்படுத்திவிட்டு ஏமாற்றிவிட்டார் என்று கூறிவருகிறார்’ .

- Advertisement -

மேலும், ஸ்ரீரெட்டியை ஏமாற்றியவர்களை குறித்து பேசிய கருணாஸ் ‘அந்த பெண் , தங்களது பெருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்திவிட்டதாக சிலர் கூறுகின்றனர், இவ்வள்வு பெரும் புகழும் இருக்கும் நீங்கள் இப்படி கேவலமாக நடந்து கொள்ளலாமா, உன்னிடம் பணமில்லையா? விபச்சாரம் அங்கீகரிக்க நாடுகள் இருக்கிறதே இடங்கள் இருக்கிறதே, அங்கு போக வேண்டியது தானே. எதற்காக இப்படி சினிமா மீது ஆசையில் வரும் சூழ்நிலை கைதிகளை இப்படி பயன்படுத்தி கொள்கிறீர்கள்.

karunas

-விளம்பரம்-

இதுபோன்ற செயல்களை செய்யும் போது மனசாட்சி இல்லையா உங்களுக்கெல்லாம்.தவறு செய்துவிட்டு தற்போது சாட்சி இல்லை என்று கூறிவிடலாம். ஆனால், மனசாட்சி என்று ஒன்று இருக்கிறது அல்லவா. இந்த பெண் (ஸ்ரீரெட்டி ) தற்போது இது போன்ற விஷயங்களை வெளியில் சொன்னதால்,இனிமேலாவது இதுபோன்று ஏமாற்று வேலைகளை செய்யும் போது அவர்களுக்கு ஒரு பயம் ஏற்படுமல்லவா.” என்று நடிகை ஸ்ரீரெட்டி முன்வைத்து வரும் குற்றசாட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

Advertisement