பொன்னபலம் என்ற ஒரு வில்லன் நடிகர் ஒரு காலத்தில் பலே வில்லனாக தமிழ் சினிமாவில் வலம் வந்தவர். முன்னணி நடிகர்கள் அனைவருக்கும் வில்லனாக நடித்து பெயர் பெற்றவர். இந்த வில்லன் நடிகர் 1963ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர்.
சிறு வயதிலேயே ஜிம்னாஸ்டிக்ஸ் , லாங் ஜம்ப் மற்றும் ஹை ஜம்ப் ஆகியவற்றில் கை தேர்ந்து விளங்கியவர். மேலும், 1984ஆம் ஆண்டு தேசிய அளவிலான தடகளப் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றவர் பொன்னம்பலம்.

ஆனால் இவர் எப்படி சினிமாவிற்குள் வந்தார் தெரியுமா? பொன்னம்பலத்திற்கு மொத்தம் 6 அக்கா தங்கைகள். இவர்கள் தான் பொன்னம்பலத்தை சினிமாவில் நடிக்க உதவினார். அவர்களது தூண்டுதல் காரணமாக 1988ஆம் ஆண்டு கலியுகம் படத்தில் வில்லனாக அறிமுகமானார். அதன் பின்னர் 1993ஆம் ஆண்டு வால்டர் வெற்றிவேல் படத்தில் நடித்து அசத்தினார்.
இந்த படத்தில் இவர் நடித்த ‘கபாலி’ கதாபாத்திரம் அனைவரையும் கவர்ந்தது. அதன் பின்னர் தான் தமிழ் திரையுலகில் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் வலம் வந்தார். அபூர்வ சகோதரர்கள், கூலி, இந்தியன், சிம்மராசி உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்து அசத்தினார்.

Advertisement

பின்னர் இவரது ஒரே மாதிரியான வில்லன் கேரக்டர்கள் மக்களுக்கு போர் அடித்து போக, 2008ஆம் ஆண்டில் இருந்து காமெடி கேரக்டர்களில் நடிக்க துவங்கினார். கடைசியாக பறந்து செல்லவா என்ற படத்தில் நடித்தவர், விழுப்புரத்தில் மைக்கேல் என்பவரிடம் தன் அறக்கட்டளைக்கு ஓர் கார் எடுத்து இரண்டு மாத வாடகை மட்டும் கொடுத்துவிட்டு பின்னர் கொடுக்காமல் இருந்துள்ளார்.

இவர், அதிமுக கட்சியை சேர்ந்தவர். ஒவ்வொரு தேர்தலுக்கும் அந்த கட்சிக்காக உழைப்பவர். மேலும், தனது காருக்கு வாடகை கொடுக்காததால் மைக்கேல் வழக்கு தொடுத்தார். பின்னர் அரசு வக்கீல் மூலம் அந்த கேஸை தள்ளுபடி செய்ய வைத்தார் பொன்னம்பலம். தற்போது, ஆமா நான் போக்கிரி தான் என்ற ஒரு பெரிய பட்ஜெட் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இந்த படத்திற்கு பூஜை போடப்பட்டது. இந்த படத்தில் இவருக்கு வில்லனாக அல்லாமல் ஒரு முக்கிய கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Advertisement